தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சட்டசபைக்கு வராமல் 'ஆப்சென்ட்' காங்., பரத் ரெட்டி மீது அதிருப்தி

 சட்டசபைக்கு வராமல் 'ஆப்சென்ட்' காங்., பரத் ரெட்டி மீது அதிருப்தி

 சட்டசபைக்கு வராமல் 'ஆப்சென்ட்' காங்., பரத் ரெட்டி மீது அதிருப்தி


ADDED : பிப் 05, 2026 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 06:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடகாவின் ஆந்திர எல்லையில் பல்லாரி மாவட்டம் அமைந்து உள்ளது. பல்லாரி அதிரடி அரசியலுக்கு பெயர் போனது. இங்கு சண்டை எல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கும். அப்படிப்பட்ட பல்லாரி சிட்டி தொகுதியில் முதன் முதலாக கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் பரத் ரெட்டி.

இவர், பல்லாரியின் முக்கிய புள்ளிகளான ஜனார்த்தன ரெட்டி மற்றும் ஸ்ரீ ராமுலு ஆகிய இருவரின் ஆதரவாளர்களையும் தோற்கடித்து வெற்றி பெற்றதால் மிகவும் பிரபலம் அடைந்தார்.

நாகேந்திரா இது, பரத் ரெட்டிக்கு கட்சியில் நற்பெயரை ஏற்படுத்தி கொடுத்தது. இந்த நற்பெயர் சமீபத்தில் நடந்த பல்லாரி கலவரத்தில் பறிபோனது.

இவர் பொதுவாகவே சட்டசபை கூட்டத்தொடர்களில் பங்கேற்பதில் விருப்பம் காட்ட மாட்டார். ஆனால், இம்முறை நடக்கும் சட்டசபையில் நிச்சயம் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

பல்லாரி கலவரம் குறித்து அவையில் விளக்கம் அளிப்பார் என கூறப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை. இது, அவரது தொகுதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், இவருக்கு பதிலாக பல்லாரி ரூரல் தொகுதி காங்., - எம்.எல்.ஏ., நாகேந்திராவே வாதாட வேண்டியதாயிற்று.

கேள்வி சட்டசபையில் விவசாயம், வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு, குடிநீர், கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படுகின்றன.

இத்தகைய முக்கியமான விவாதங்களில் பங்கேற்காமல் பரத் ரெட்டி இருப்பது, அந்தத் தொகுதி மக்களின் நலனை புறக்கணிப்பதற்குச் சமமாகும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பா.ஜ.,வினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

'சட்டசபைக்கு வராதவர் எதற்காக எம்.எல்.ஏ., பதவியில் இருக்கிறார்' என்ற கேள்வி சமூ க வலைதளங்களில் பேசப்படுகிறது.

'இத ற்கு பதிலளித்த காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள், 'கட்சி பணிகள், தொகுதி மக்களின் சந்திப்புகள் காரணமாக பரத் ரெட்டியால் சட்டசபையில் பங்கேற்க முடியவில்லை' என விளக்கம் அளித்து உள்ளனர்.

இந்த விளக்கம் தொகுதி மக்களை திருப்திப்படுத்தும் வகையில் இல்லை. இதே நடைமுறைகளை பரத் பின்பற்றினால் அடுத்த தேர்தலில் வெல்வது கடினமே என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us