/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விஜயேந்திராவுக்கு எதிராக மீண்டும் அதிருப்தி அணி
/
விஜயேந்திராவுக்கு எதிராக மீண்டும் அதிருப்தி அணி
ADDED : ஜூன் 21, 2025 11:14 PM
பெங்களூரு: பா.ஜ., தலைவர் விஜயேந்திராவுக்கு எதிராக, அதிருப்தி அணி மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளது.
கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திராவுக்கு எதிராக, பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் தலைமையில் அதிருப்தி அணி உருவானது. இந்த அணியில் மூத்த எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, ஹரிஷ், முன்னாள் எம்.பி., சித்தேஸ்வர் உள்ளிட்டோர் இருக்கின்றனர்.
விஜயேந்திராவுக்கு எதிராகவும், கட்சிக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து பேசியதால் எத்னால் நீக்கப்பட்டார். இதையடுத்து அதிருப்தி அணியினர் அமைதியாகினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் உள்ள சித்தேஸ்வர் வீட்டில், அதிருப்தி அணியினர் திடீரென ஆலோசனை நடத்தினர். ஆச்சரியம் அளிக்கும் விதமாக, ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணாவும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
விஜயேந்திராவை பதவியில் இருந்து நீக்க, மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா, எம்.பி., பசவராஜ் பொம்மை ஆகியோர் ஆதரவையும் கேட்க, அதிருப்தி அணியினர் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

