தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ராகுலுடன் சித்தராமையா சந்திப்பு வீடியோ விவகாரம் குறித்து அதிருப்தி?

ராகுலுடன் சித்தராமையா சந்திப்பு வீடியோ விவகாரம் குறித்து அதிருப்தி?

ராகுலுடன் சித்தராமையா சந்திப்பு வீடியோ விவகாரம் குறித்து அதிருப்தி?


UPDATED : நவ 03, 2026 12:00 AM

ADDED : நவ 02, 2026 10:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 12:00 AM ADDED : நவ 02, 2026 10:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –

டில்லியில் உள்ள இல்லத்தில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, அவரது மகனும், நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சருமான யதீந்திரா, முதல்வர் சிவகுமாரின் அரசியல் செயலர் பொன்னண்ணா ஆகியோர் நேற்று சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது, ‘நீங்கள் கூறியதால் தான் முதல்வர் பதவியில் இருந்து எந்த பிரச்னையும் செய்யாமல் விலகினேன். என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வீடியோ வெளிவந்துள்ளது.

இதன் பின்னணியில் நமது கட்சியினரும் இருப்பது வேதனையாக உள்ளது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான் மீண்டும் மீண்டும் கேட்டு கொண்ட பின்னர் தான், வழக்கின் விசாரணை தீவிரம் அடைந்தது. இது எனக்கு வருத்தம் ஏற்படுத்தியது’ என்று, ராகுல் முன் சித்தராமையா தனது அதிருப்தியை வெளிப்படுத்தினர். ‘எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம்’ என்று கூறி, சித்தராமையாவை, ராகுல் சமாதானம் செய்து அனுப்பியுள்ளார்.

சந்திப்புக்கு பின் சித்தராமையா கூறுகையில், ‘‘என்னை பற்றி பெண் ஒருவர் பேசிய வீடியோ பற்றி, ராகுலிடம் எதுவும் விவாதிக்கவில்லை. கர்நாடகாவில் கட்சியை பலப்படுத்துவது குறித்தும், மீண்டும் ஆட்சிக்கு வர என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் பேசினோம்,’’ என்றார்.

முன்ஜாமின்



ராகுலை சந்திக்கும் முன், கட்சியின் தேசிய பொதுச்செயலர் வேணுகோபாலை, சித்தராமையா சந்தித்தார். தனக்கு எதிரான வீடியோ குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

சித்தராமையா தொடர்பான வீடியோ வெளியான வழக்கில், காங்கிரஸ் பெண் பிரமுகர் கிருபா ஆல்வா, அவரது ஆதரவாளர் பிரசாந்த், டில்லியின் வினோத் சர்மா ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. விசாரணைக்கு ஆஜராக சி.சி.பி., போலீசார் சம்மன் அனுப்பினர்.

விசாரணையின் போது கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில், மூன்று பேரும் முன்ஜாமின் கேட்டு, பெங்களூரு 66வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு செய்தனர். இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மூன்று பேருக்கும் முன்ஜாமின் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us