ADDED : ஆக 04, 2026 02:13 AM
அ நிறம் | அளவு
கர்நாடக மாநிலத்தில் 31 மாவட்டங்கள் உள்ளன. சிக்கமகளூரில் நான்கு, சிக்கபல்லாபூரில் மூன்று, கோலாரில் நான்கு, ராய்ச்சூரில் நான்கு, யாத்கிரில் மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில், மேற்கண்ட ஐந்து மாவட்டங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
அதுபோன்று, கதக்கின் ஜி.எஸ்.பாட்டீலுக்கு சபாநாயகர் பதவியும், குடகிற்கு பொன்னண்ணாவுக்கு துணை சபாநாயகர் பதவியும் வழங்கி உள்ளது.
துணை சபாநாயகராக இருந்த ருத்ரப்பா லமானி, அமைச்சராகி விட்டதால், துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து உள்ளார். தற்காலிக சபாநாயகராக துமகூரின் சிரா எம்.எல்.ஏ., ஜெயசந்திரா நியமிக்கப்பட்டு உள்ளார்.
