/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெண்ணின் நுரையீரலில் சிக்கிய 'சேப்டி பின்' அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றம்
/
பெண்ணின் நுரையீரலில் சிக்கிய 'சேப்டி பின்' அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றம்
பெண்ணின் நுரையீரலில் சிக்கிய 'சேப்டி பின்' அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றம்
பெண்ணின் நுரையீரலில் சிக்கிய 'சேப்டி பின்' அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றம்
ADDED : ஜூலை 04, 2025 11:12 PM
பெங்களூரு: தும்மும்போது பெண்ணின் தொண்டைக்குள் சென்று, நுரையீரலில் சிக்கிக் கொண்ட 'சேப்டிபின்'னை அறுவை சிகிச்சை மூலம், டாக்டர்கள் அகற்றினர்.
பெங்களூரை சேர்ந்த 55 வயது பெண்ணொருவர், ஒரு மாதத்துக்கு முன்பு, துணிக்கடைக்கு 'ஷாப்பிங்' சென்றிருந்தார்.
துணிகளை தேர்வு செய்து கொண்டிருந்தார். அப்போது உடைகளுக்கு குத்திக் கொள்ளும் 'சேப்டிபின்'னை வாயில் வைத்திருந்தார்.
எதிர்பாராமல் தும்மல் வந்ததால், 'சேப்டிபின்'னை விழுங்கிவிட்டார்.
இதை அப்பெண் பொருட்படுத்தவில்லை. சம்பவம் நடந்த சில நாட்களில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. வறட்டு இருமலால் அவதிப்பட்டார்.
மருத்துமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. பல மருத்துவமனைகளுக்கு சென்றும் பயனில்லை.
இறுதியாக பெங்களூரு, ஹெப்பாலின், சஹகார நகரில் உள்ள ஆஸ்டர் சி.எம்.ஐ., மருத்துவமனைக்கு சென்றார். அங்குள்ள டாக்டர், அப்பெண்ணுக்கு எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் உட்பட, பல பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இதில் நுரையீரலில் 'சேப்டிபின்' சிக்கியிருப்பது தெரிய வந்தது. நேற்று முன் தினம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து, சேப்டிபின்னை டாக்டர்கள் வெளியே எடுத்தனர்.
இதுகுறித்து, டாக்டர்கள் கூறியதாவது:
அந்த பெண் வாயில் வைத்திருந்த 'சேப்டிபின்', தும்மும்போது தொண்டைக்குள் சென்று, நுரையீரலில் சிக்கிக்கொண்டது.
சேப்டிபின்னின் கூரான நுனி, நுரையீரலில் குத்தியிருந்தது. சாதாரண மருத்துவ உபகரணங்களால், எடுப்பது அபாயமானது. எனவே போகார்டி பலுான் என்ற சாதனத்தை பயன்படுத்தி, நிதானமாக எடுக்கப்பட்டது.
தற்போது பெண் குணம் அடைந்துள்ளார். மூச்சுத்திணறல் பிரச்னை இல்லை. இருமலை அலட்சியப்படுத்தக் கூடாது.
பின், குண்டூசி போன்ற கூரான பொருட்களை, வாயில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.