/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிரதாப் சிம்ஹாவுக்கு ஹிந்து மதம் சொந்தமா? காங்., பிரதீப் ஈஸ்வர் கேள்வி
/
பிரதாப் சிம்ஹாவுக்கு ஹிந்து மதம் சொந்தமா? காங்., பிரதீப் ஈஸ்வர் கேள்வி
பிரதாப் சிம்ஹாவுக்கு ஹிந்து மதம் சொந்தமா? காங்., பிரதீப் ஈஸ்வர் கேள்வி
பிரதாப் சிம்ஹாவுக்கு ஹிந்து மதம் சொந்தமா? காங்., பிரதீப் ஈஸ்வர் கேள்வி
ADDED : செப் 11, 2025 07:17 AM

பெங்களூரு : ''மைசூரின் முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹாவின் பெற்றோர், கடவுள் பக்தி உள்ளவர்களாக இருப்பர். எனவே இவருக்கு பிரதாப் சிம்ஹா என, பெயர் சூட்டியுள்ளனர். இல்லையென்றால் குரங்கு என, வைத்திருப்பர்,'' என காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பிரதாப் சிம்ஹாவை, நான் பிரதாப் என குறிப்பிடுவேன். சிம்ஹா என சொல்ல மாட்டேன். சிங்கம் என்றால் கர்ஜிக்க வேண்டும். வாயில் அடித்து கொள்ளக்கூடாது. இவரை பா.ஜ.,வினர் ஒதுக்கி தள்ளினர். பிரதாப் சிம்ஹாவின் பெற்றோர், கடவுள் பக்தி உள்ளவர்களாக இருப்பர். எனவே இவருக்கு பிரதாப் சிம்ஹா என, பெயர் சூட்டியுள்ளனர். இல்லையென்றால் குரங்கு என, வைத்திருப்பர்.
ஹிந்து மதத்தை பிரதாப் சிம்ஹாவுக்கும், பசனகவுடா பாட்டீல் எத்னாலுக்கும் உயில் எழுதி கொடுத்துள்ளார்களா. நான் பேசினால் என் மீது பிரதாப் சிம்ஹா, மான நஷ்ட வழக்கு தொடர்வார். இவரை யாரும் திட்டக்கூடாது, இவர்யாரை வேண்டுமானாலும் திட்டலாமா. நானோ, லட்சுமணோ பேசினால் ஸ்டே வாங்குகிறார்.
பிரதாப்புக்கு வேலை இல்லை. இவர் மாநில அரசியலுக்கு பொருந்த மாட்டார். இவ்வளவு அகங்காரம், ஆணவம் இருந்தால் மாநில அரசியலுக்கு சரி வராது. இவருக்கு மைசூரின் இன்றைய எம்.பி., பதவியை விட்டுத்தருவாரா. எத்னாலும், பிரதாப்பும் உத்தர பிரதேச தேர்தலில் போட்டியிடுவது நல்லது.
சீதையை பார்க்க பிரதாப் சிம்ஹா, அயோத்திக்கு செல்வார். ஆனால் நாங்கள் எங்கள் தந்தை, தாயை ராமன், சீதையாக பார்ப்போம். ஹிந்து மதம் குறித்து பேசும் பிரதாப், எத்னால் எத்தனை ஹிந்து கோவில்களை மேம்படுத்தினர். இவர்கள், 'பயர்' அல்ல. பா.ஜ.,வினர் பிடுங்கி எறிந்த பயிர்கள். மாநிலத்தில், 99 சதவீதம் விநாயகர் சிலைகள் அமைதியாக கரைக்கப்பட்டன. எங்கோ ஓரிடத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. தவறு யார் செய்தாலும், அது தவறுதான். இதற்கு மத சாயம் பூசுவது ஏன்.
இவ்வாறு அவர் கூறினார்.