/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'2 மடங்கு கட்டணம் சட்டத்திற்கு எதிரானது'
/
'2 மடங்கு கட்டணம் சட்டத்திற்கு எதிரானது'
ADDED : ஜூலை 04, 2025 05:22 AM
பெங்களூரு: கர்நாடக மாநில தனியார் போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் எஸ்.நடராஜ் சர்மா பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற செயலிகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 'பீக் ஹவர்ஸ்' எனப்படும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் இரு மடங்கு கட்டணம் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டது, 1988ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டம் 67 ஐ மீறுவதாக உள்ளது.
கட்டணத்தை நிர்ணயிக்கும் உரிமை மாநில அரசிடம் உள்ளது. இரு மடங்கு கட்டணம் வசூலிப்பது பயணியருக்கு சிரமத்தை ஏற்படுத்தும். ஓட்டுநர் அல்லது பயணி பயணத்தை ரத்து செய்தால் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது. இது, செயலிகளுக்கே லாபத்தை தரும் வகையில் உள்ளது.
மத்திய அரசு வழங்கிய வழிகாட்டுதல்களில் பல சிக்கல்கள் உள்ளன. எனவே, இந்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய போக்குவரத்து துறை திருத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.