ADDED : ஏப் 30, 2026 12:20 AM
மைசூரு: குடிபோதையில் தள்ளாடியபடி, சிகிச்சைக்கு வந்த டாக்டரை பொது மக்கள் அடித்து உதைத்தனர்.
மைசூரு மாவட்டத்தின், மெல்லஹள்ளி கிராமத்தில் ஆரம்ப சுகாதார மையம் உள்ளது. இதில், அனில்குமார் என்பவர் டாக்டராக பணியாற்றுகிறார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர், குடிபோதையில் பணிக்கு வருவது வழக்கம். மருத்துவமனை உட்புறம் சிகரெட் பிடிப்பார். நோயாளிகள், உறவினர்கள் கண்டித்தும், அவர் பொருட்படுத்தவில்லை.
அது மட்டுமின்றி, ஆரம்ப சுகாதார மை யத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு, 'வாட்ஸாப் குரூப்'பில் ஆபாச மெசேஜ் அனுப்பி தொந்தரவு கொடுத்தார். இது தொடர்பாக, பெண் ஊழியர்கள் மாவ ட்ட சுகாதாரத்துறையில், புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று காலை, அனில்குமார் குடிபோதையில் தள்ளாடியபடி, பணிக்கு வந்தார். இதை கண்ட அப்பகுதியினர், அவரை பிடித்து உதைத்தனர். இவரை பணி நீக்கம் செய்யும்படி, சுகாதாரத்துறை அதிகாரிகளை வலியுறுத்தினர். 'குடிபோதையில் இவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தால், அவர்களின் நிலை என்ன. இவரை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எ டுக்காதது ஏன்' என்று கேள்வி எழுப்புகின்றனர்.

