தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பணியில் இருந்து தாமதமாக வந்த மனைவி கொலை கணவர் சரண்

 பணியில் இருந்து தாமதமாக வந்த மனைவி கொலை கணவர் சரண்

 பணியில் இருந்து தாமதமாக வந்த மனைவி கொலை கணவர் சரண்


ADDED : ஏப் 30, 2026 11:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 30, 2026 11:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: மனைவியை கொலை செய்த கணவர், போலீசில் சரண் அடைந்தார்.

மைசூரு நகரின், தேவராஜ் அர்ஸ் சாலையில் வசிப்பவர் மகேஷ், 30. இவரது மனைவி புஷ்பா, 24. புஷ்பா தனியார் துணிக்கடை ஒன்றில் பணியாற்றுகிறார். காலையில் பணிக்கு செல்லும் இவர், தினமும் தாமதமாக வீட்டுக்கு வந்தார். இது கணவருக்கு பிடிக்கவில்லை. விரைவில் வீட்டுக்கு வரும்படி திட்டினார்.

இரவு தினமும் தாமதமாக வருவதால், மனைவியின் நடத்தையில் மகேஷுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதே காரணத்தால் தம்பதிக்கு, அவ்வப்போது தகராறு நடந்தது. நேற்று முன் தினம் இரவும், புஷ்பா வழக்கம் போன்று பணியில் இருந்து, தாமதமாக வந்தார்.

இதனால் கோபமடைந்த மகேஷ், மனைவியை திட்டினர். வாக்குவாதம் முற்றியதில், கோடாரியை எடுத்து புஷ்பாவின் தலையில் ஓங்கி அடித்தார். அதன்பின் முகத்தில் தலையணை வைத்து அழுத்தி, கொலை செய்தார்.

சிறிது நேரம் கழித்து, நரசிம்மராஜா போலீஸ் நிலையத்துக்கு சென்று, நடந்ததை கூறி, சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us