/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தசரா திரைப்பட விழா 10 குறும்படங்கள் தேர்வு
/
தசரா திரைப்பட விழா 10 குறும்படங்கள் தேர்வு
ADDED : ஆக 31, 2025 11:22 PM
மைசூரு: மைசூரு தசராவை ஒட்டி, 10 குறும்படங்களை தசரா திரைப்பட விழா துணை கமிட்டி தேர்வு செய்துள்ளது.
மைசூரு தசராவை ஒட்டி, தசரா திரைப்பட விழா துணை கமிட்டி சார்பில் குறும்படத்துக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, பல மொழிகளில் இருந்து 34 குறும்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதை துணை கமிட்டியினர் பார்வையிட்டனர்.
பின், இம்பலிசி, ஆ ஷனா, அதிருஷ்ட லட்சுமி, மார்வென், நன்ன பிரபஞ்சா, ஹப்பத ஹசிவு, கலாந்த்ரா, இத்ருபாயி, லகுமி, செக்ஸ் டாய் ஆகிய பத்து குறும்படங்கள் தேர்வாகி உள்ளன.
இந்த குறும்படங்களை இந்திரா காந்தி அரசு முதல் நிலை கல்லுாரி பேராசிரியர் நரேந்திர குலகட்டி, சி.ஏ.வி.ஏ., பேராசிரியர் டாக்டர் சரிதா, மைசூரு பல்கலைக்கழக எம்.எம்.ஆர்.சி., டெக்னிஷியன் கோபிநாத், பெங்களூரு சவுண்ட் இன்ஜினியர் அனில்குமார் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் தேர்வு செய்தனர்.
இதில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் குறும்படங்களுக்கு, தசராவின் போது சான்றிதழ், ரொக்க பரிசு வழங்கப்படும்.
மைசூரு, செப். 1-
மைசூரு தசராவை ஒட்டி, 10 குறும்படங்களை தசரா திரைப்பட விழா துணை கமிட்டி தேர்வு செய்துள்ளது.
மைசூரு தசராவை ஒட்டி, தசரா திரைப்பட விழா துணை கமிட்டி சார்பில் குறும்படத்துக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, பல மொழிகளில் இருந்து 34 குறும்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதை துணை கமிட்டியினர் பார்வையிட்டனர்.
பின், இம்பலிசி, ஆ ஷனா, அதிருஷ்ட லட்சுமி, மார்வென், நன்ன பிரபஞ்சா, ஹப்பத ஹசிவு, கலாந்த்ரா, இத்ருபாயி, லகுமி, செக்ஸ் டாய் ஆகிய பத்து குறும்படங்கள் தேர்வாகி உள்ளன.
இந்த குறும்படங்களை இந்திரா காந்தி அரசு முதல் நிலை கல்லுாரி பேராசிரியர் நரேந்திர குலகட்டி, சி.ஏ.வி.ஏ., பேராசிரியர் டாக்டர் சரிதா, மைசூரு பல்கலைக்கழக எம்.எம்.ஆர்.சி., டெக்னிஷியன் கோபிநாத், பெங்களூரு சவுண்டு இன்ஜினியர் அனில்குமார் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் தேர்வு செய்தனர்.
இதில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் குறும்படங்களுக்கு, தசராவின் போது சான்றிதழ், ரொக்க பரிசு வழங்கப்படும்.