/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சைக்கிளில் சென்றவரை துரத்தி தாக்கிய யானை
/
சைக்கிளில் சென்றவரை துரத்தி தாக்கிய யானை
ADDED : ஜூலை 09, 2025 07:25 AM
குடகு : ருத்ரபீடு கிராமத்தில் சைக்கிளில் சென்றவரை காட்டு யானை விரட்டி தாக்கியது. மற்றொருவரை மிதித்து கொன்றது.
குடகு மாவட்டம், மடிகேரி தாலுகாவின், ருத்ரபீடு கிராமத்தில் வசிப்பவர் அஜேஷ், 40. இவர் நேற்று காலை சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென காட்டு யானை எதிரே வந்தது. இதை கண்டு பீதியடைந்த அஜேஷ், சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு, தப்பியோட துவங்கினார்.
ஆனால், யானை அவரை விரட்டி தாக்கியதில் காயமடைந்தார். அவர் சுதாரித்து கொண்டு ஓடினார். அப்போது இதே சாலையில் 50 வயது நபர் நடந்து வந்து கொண்டிருந்தார். அவரை கண்ட யானை, அஜேஷை துரத்துவதை விட்டு விட்டு, அந்த நபரை தும்பிக்கையால் தாக்கி, கீழே தள்ளி மிதித்து கொன்றது.
யானை தாக்குதலில் பலியான நபர், அடையாளம் தெரியவில்லை. சில நாட்களாக கிராமத்தில் நடமாடினார். பஸ் நிலையத்தில் உறங்கினார் என, கிராமத்தினர் கூறுகின்றனர். காயமடைந்த அஜேஷ், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்.
வனத்துறையினர் வந்து பார்த்தபோது, அங்கு மூன்று யானைகள் தென்பட்டன. இதில் எந்த யானை தாக்குதல் நடத்தியது என, தெரியவில்லை. மூன்று யானைகளையும் காட்டுக்குள் விரட்டும் முயற்சியில், வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.