/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புலிகளை பிடிக்க 'கும்கி' யானைகள்
/
புலிகளை பிடிக்க 'கும்கி' யானைகள்
ADDED : டிச 23, 2025 06:57 AM

சாம்ராஜ்நகர்: புலிகளை பிடிக்க இரண்டு கும்கி யானைகளை வனத்துறையினர் அழைத்து வந்து உள்ளனர்.
சாம்ராஜ்நகர் குண்டுலுபேட் தாலுகாவில் கடந்த சில நாட்களாக புலிகள் சுற்றித்திரிகின்றன. கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் தீவிரமாக புலிகளை தேடி வருகின்றனர். நேற்று முன்தினம் முக்தி காலனி பகுதியில் ஆண் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். நேற்று 'ட்ரோன்' மூலம் தேடும் போது, நஞ்சன்தேவபுராவில் உள்ள கல் குவாரியில் ஐந்து புலிகள் படுத்து கிடப்பது தெரிந்தது.
இதையடுத்து, புலியை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். இதற்காக துபாரே ஹாரங்கி யானைகள் முகாமில் இருந்து ஈஸ்வர், லட்சுமணா என்ற இரண்டு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. கும்கி யானைகள் புலியை பிடித்துவிடும் என்ற நம்பிக்கையில் மக்கள் உள்ளனர்.
இங்கு நிலவும் அசாதாரண சூழல் குறித்து, சாம்ராஜ்நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ, புட்டரங்கஷெட்டி முதல்வர் சித்தராமையாவிடம் போனில் உரையாடினார். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்து உள்ளார்.

