/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சூதாட்டத்திற்கு அடிமையானதால் செயின் பறித்த இன்ஜினியர் கைது
/
சூதாட்டத்திற்கு அடிமையானதால் செயின் பறித்த இன்ஜினியர் கைது
சூதாட்டத்திற்கு அடிமையானதால் செயின் பறித்த இன்ஜினியர் கைது
சூதாட்டத்திற்கு அடிமையானதால் செயின் பறித்த இன்ஜினியர் கைது
ADDED : ஜூலை 08, 2025 11:57 PM

பெங்களூரு : சூதாட்டத்திற்கு அடிமையானதால் திருட்டில் ஈடுபட்ட, சாப்ட்வேர் இன்ஜினியர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று அளித்த பேட்டி:
பெங்களூரு மாகடி சாலையில் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய பெண்ணிடம், தங்க செயின் பறித்ததாக, ஷிவமொக்காவை சேர்ந்த மூர்த்தி, 32, என்பவரை, மாகடி சாலை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான 245 கிராம் நகைகள், மீட்கப்பட்டுள்ளன.
சாப்ட்வேர் இன்ஜினியரான மூர்த்தி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கிரிக்கெட், குதிரை உட்பட பல சூதாட்டங்களில் ஈடுபட்டார்.
அவற்றில் பணம் கட்டி தோற்றார். லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பின், சொந்த ஊரான ஷிவமொக்கா சென்றார்.
ஆனாலும் அவரை தேடி, பந்தய புக்கிகள் வீட்டிற்கு சென்றுள்ளனர். தங்களுக்கு தர வேண்டிய பணத்தை கேட்டு பிரச்னை செய்துள்ளனர்.
சொத்து விற்பனை
இதனால், மூர்த்தியின் தந்தை தனது சொத்துகளை விற்று, பந்தய புக்கிகளுக்கு பணம் கொடுத்துள்ளார். மகனை நல்வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று பெற்றோர், ஷிவமொக்காவில் இருந்து பெங்களூரு வந்து வாடகை வீட்டில் தங்கி உள்ளனர்.
பணத்தை இழந்ததால் கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்த மூர்த்தி மீண்டும் சூதாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார். இதற்கு பணம் தேவை என்பதால் திருட ஆரம்பித்தார். தற்போது போலீசில் சிக்கி உள்ளார்.
இதுபோல, 180க்கும் மேற்பட்ட பெண்களிடம் தங்க செயின் பறித்த வழக்கில், ஹாவேரியை சேர்ந்த கனி, 37, என்பவரை கிரிநகர் போலீசார் கைது செய்தனர்.
சுங்கதகட்டேயில் வசிக்கும் அவர் கிரிநகர், பனசங்கரி, ஒசகெரேஹள்ளி அதை சுற்றியுள்ள பகுதிகளில் கைவரிசை காட்டினார். அவரிடம் இருந்து 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான 541 கிராம் தங்க செயின்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதுபோல எலஹங்கா போலீசார் வாகன திருட்டு வழக்குகளில், ஆந்திராவின் ரவி நாயக் என்கிற சாக்லர் ரவி, 45, என்பவரை கைது செய்தனர்.
இவர் பாகலுார் கிராஸ், எலஹங்கா ரயில் நிலையம், சிக்கபல்லாபூர், தொட்டபல்லாபூர் பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியது தெரிந்தது. இவரிடம் இருந்து, 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 40 பைக்குகள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.