/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கண் பரிசோதனை மையங்கள்
/
மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கண் பரிசோதனை மையங்கள்
மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கண் பரிசோதனை மையங்கள்
மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கண் பரிசோதனை மையங்கள்
ADDED : ஜூலை 02, 2025 06:26 AM

பெங்களூரு : ''மாவட்ட, தாலுகா அரசு மருத்துவமனைகளில் கண் பரிசோதனை மையங்கள் திறக்கப்படும்,'' என, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மாநில அரசு, 'ஆஷா கிரணா' திட்டத்தில் பல மாறுதல்களை செய்ய உள்ளது.
கர்நாடகாவில் பார்வை குறைபாடு நோய்களை முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளில் கண் பரிசோதனை மையங்கள் திறக்கப்படும்
கண் பிரச்னைகளை தடுப்பதே நோக்கமாகும். இம்மையங்களுக்கு மக்கள் நேரடியாக சென்று, கண் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
ஆஷா கிரணா திட்டம் மூலம் கடந்த 2022 - 23ல், சிக்கபல்லாபூர், சாம்ராஜ்நகர், ஹாவேரி, கலபுரகி ஆகிய மாவட்டங்களில் 68.21 லட்சம் பேருக்கு பரிசோதனை நடந்தது. 2.70 லட்சம் பேருக்கு இலவச கண்ணாடிகள் வழங்கப்பட்டன. 59,842 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதேபோல், 2023 - 24ல், சித்ரதுர்கா, மாண்டியா, ராய்ச்சூர், உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களில் 72.15 லட்சம் பேருக்கு பரிசோதனை நடந்தது. 1.60 லட்சம் பேருக்கு இலவச கண்ணாடி வழங்கப்பட்டது. 45,267 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மொத்தம் 1.40 கோடி பேருக்கு கண் பரிசோதனை; 4.30 லட்சம் பேருக்கு இலவச கண்ணாடி; 1.05 லட்சம் பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.
தற்போது, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 11 ஆஷா கிரணா மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.