தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இடி தாக்கி விவசாயி உயிரிழப்பு

 இடி தாக்கி விவசாயி உயிரிழப்பு

 இடி தாக்கி விவசாயி உயிரிழப்பு


ADDED : மே 29, 2026 12:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 12:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மைசூரு: குடகு மாவட்டம், மடிகேரி தாலுகாவின், ஹெரவநாட் கிராமத்தை சேர்ந்தவர் ரோஷன் பாலகிருஷ்ணா, 43. இவர் பெங்களூரின், ஐ.டி., நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றினார். ஐ.டி., நிறுவனத்தின் பணி அழுத்தத்தால், வெறுப்படைந்த அவர், கடந்த சில மாதங்களுக்கு முன், ஐ.டி., தொழிலுக்கு முழுக்கு போட்டுவிட்டு, விவசாயத்தில் ஈடுபட்டார்.

மைசூரு மாவட்டம், யலவாளா அருகில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்கிறார். மே 26ம் தேதியன்று, மனைவி, மகனுடன் நிலத்துக்கு சென்றிருந்தார். மாங்காய் பறிப்பதில் ஈடுபட்டனர். அப்போது பலத்த காற்று, இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

மழையை பொருட்படுத்தாமல் மாங்காய் பறிக்கும் போது , இடி தாக்கியதில் ரோஷன் காயமடைந்தார். அவரை மருத்துவனைக்கு அழைத்து செல்லும் போது, வழியில் உயிரிழந் தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us