தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ யானை தாக்குதலில் உயிர் தப்பிய விவசாயி

 யானை தாக்குதலில் உயிர் தப்பிய விவசாயி

 யானை தாக்குதலில் உயிர் தப்பிய விவசாயி


ADDED : ஜூலை 10, 2026 12:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2026 12:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹாசன்: வீட்டின் அருகில் மாடுகளை கட்டி போடும் போது, உணவு தேடி வந்த யானை, விவசாயியை தாக்கியது. அதிர்ஷ்டவசமாக காயத்துடன் அவர் உயிர் தப்பினார்.

ஹாசன் மாவட்டம், பேலுாரின் கனகுப்பே கிராமத்தை சேர்ந்தவர் சித்தா ஷெட்டி, 65. நேற்று காலை தன் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் கால்நடைகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது உணவு தேடி கிராமத்துக்குள் நுழைந்த யானை, திடீரென அவரை தாக்கியது. இதில், சித்தா ஷெட்டியின் வயிறு, வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இவரின் அலறல் சத்தம் அக்கம் பக்கத்தினர் வெளியே வந்தனர். யானை, சித்தா ஷெட்டியை தாக்குவதை பார்த்து கூச்சலிட்டனர். இதனால் யானை வனப்பகுதிக்குள் சென்றனர். படுகாயம் அடைந்த சித்தா ஷெட்டி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வனத்துறை அதிகாரி திரிமூர்த்தி கூறுகையில், ''இப்பகுதியில், 12க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் முகாமிட்டு உள்ளது. அதில் இருந்து பிரிந்த யானை, இக்கிராமத்திற்குள் நுழைந்துள்ளது. சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ளேன். விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us