/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நஞ்சன்கூடு கிடங்கில் யூரியா பதுக்கல் விவசாய சங்கத்தினர் கண்டுபிடிப்பு
/
நஞ்சன்கூடு கிடங்கில் யூரியா பதுக்கல் விவசாய சங்கத்தினர் கண்டுபிடிப்பு
நஞ்சன்கூடு கிடங்கில் யூரியா பதுக்கல் விவசாய சங்கத்தினர் கண்டுபிடிப்பு
நஞ்சன்கூடு கிடங்கில் யூரியா பதுக்கல் விவசாய சங்கத்தினர் கண்டுபிடிப்பு
ADDED : ஆக 06, 2025 08:13 AM

மைசூரு : மாநிலத்தில் யூரியா உரம் பற்றாக்குறை உள்ள நிலையில், தனியார் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்ட உர மூட்டைகளை, விவசாய தலைவர்கள் கண்டுபிடித்தனர்.
கர்நாடகாவில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. பல மாவட்டங்களில், மழை தொடர்ந்து பெய்கிறது. இதனால் விவசாயிகள் நாற்று நடுகின்றனர். பயிர்களும் செழிப்பாக வளர்கின்றன. இந்த நேரத்தில் உரம் போட வேண்டியுள்ளது. ஆனால் மாநிலத்தில் உரப் பற்றாக்குறை நிலவுகிறது.
பனிப்போர் தேவையான யூரியா உரத்தை மத்திய அரசு விநியோகிக்கவில்லை என, மாநில அரசு குற்றஞ்சாட்டுகிறது. ஆனால் மழைக்காலம் துவங்கும் முன்பே, தேவையான உரம் வழங்கிவிட்டோம். அதை விவசாயிகளுக்கு அதிகாரிகள் வழங்கவில்லை என, மத்திய அரசு குற்றஞ்சாட்டுகிறது. மத்திய, மாநில அரசுகளின் பனிப்போரால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
இதற்கிடையே சில உர உற்பத்தி நிறுவனங்கள், உரத்தை பதுக்கி வைத்து செயற்கையான பற்றாக்குறையை ஏற்படுத்தி, அதிக விலைக்கு விற்பதாக தகவல் வெளியானது. உரத்தை வெளிமாநிலங்களுக்கு கொண்டு சென்று, அதிக விலைக்கு விற்கின்றனர்.
மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகாவின், ஹுல்லஹள்ளி சாலையில் உள்ள கிடங்கில், யூரியா உரத்தை பதுக்கி வைத்து, சட்டவிரோதமாக வெளி மாநிலங்களுக்கு விற்பது தெரிந்தது. இதனால் கொதித்தெழுந்த விவசாய சங்கத்தினர், நேற்று மதியம் அந்த கிடங்குகளில் நுழைந்து, சோதனை நடத்தினர். அங்கு உர மூட்டைகள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன்பின் கிடங்குக்கு பூட்டு போட்டனர்.
பறிமுதல் விவசாயத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த அதிகாரிகள், உர மூட்டைகளை பறிமுதல் செய்தனர். கிடங்கு உரிமையாளரிடம் விசாரணை நடத்துகின்றனர்.
விவசாய சங்கத்தினர் கூறியதாவது:
மாநிலத்தில் நல்ல மழை பெய்துள்ளது. விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் மத்திய அரசு மானிய விலையில், யூரியா உரம் வழங்குகிறது. ஆனால் வெளி மாநிலங்களுக்கு கொண்டு சென்று, அதிக விலைக்கு விற்கின்றனர்.
எவ்வளவு யூரியா உரம், சட்டவிரோதமாக வேறு மாநிலங்களுக்கு விற்கப்பட்டது என்பதை, அதிகாரிகள் கண்டுபிடிக்க வேண்டும். தவறு செய்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

