/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கே.ஆர்.எஸ்., காவிரி ஆரத்தி விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு
/
கே.ஆர்.எஸ்., காவிரி ஆரத்தி விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு
கே.ஆர்.எஸ்., காவிரி ஆரத்தி விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு
கே.ஆர்.எஸ்., காவிரி ஆரத்தி விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு
ADDED : மே 26, 2025 12:16 AM
மாண்டியா : கே.ஆர்.எஸ்., காவிரி ஆரத்தி நடத்தும் மாநில அரசின் திட்டத்துக்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வட மாநிலங்களில், கங்கா ஆரத்தி மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாட்டு நிகழ்வு. அதே போன்று கர்நாடகாவில் புண்ணிய ஆறாக கருதப்படும் காவிரியை பூஜிக்கும் வகையில், காவிரி ஆரத்தி நடத்த வேண்டும் என்பது, மாநில அரசின் விருப்பமாகும்.
குறிப்பாக துணை முதல்வர் சிவகுமார், இவ்விஷயத்தில் மிகவும் ஆர்வம் காட்டுகிறார். காவிரி ஆரத்தி நடத்துவதற்காக குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் ஹரித்வார், காசி ஆகிய இடங்களுக்குச் சென்று, கங்கா ஆரத்தி குறித்து ஆய்வு செய்தனர். அரசுக்கு அறிக்கை அளித்தனர்.
அறிக்கை அடிப்படையில், காவிரி ஆரத்தி நடத்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள கே.ஆர்.எஸ்., அணை வளாகத்தில், தசரா நேரத்தில் காவிரி ஆரத்தி நடத்த ஏற்பாடு நடக்கிறது. இதற்காக 92 கோடி ரூபாய் செலவிடுகிறது.
நடப்பாண்டு முதல் ஆண்டுதோறும், காவிரி ஆரத்தி நடத்துவது அரசின் எண்ணம். ஆனால் இதற்கு விவசாயிகள் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. காவிரி ஆரத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தை விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண பயன்படுத்துங்கள் என, அவர்கள் வலியுறுத்துகின்றனர். இத்திட்டத்தை எதிர்த்து மாண்டியாவில் போராட்டத்தையும் துவக்கி உள்ளனர்.