ADDED : ஜூலை 23, 2026 11:10 PM

சிக்கபல்லாபூர்: இரண்டாவதும் பெண் குழந்தையாக பிறந்ததால், 14 நாள் குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.
சிக்கபல்லாபூர் நகரின், சாந்தி நகரில் வசிப்பவர் இம்ரான், 30. இவரது மனைவி முஸ்கான், 25. தம்பதிக்கு முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததால், இம்ரான் வெறுப்பில் இருந்தார். இந்நிலையில் முஸ்கான், இரண்டாவதாக கர்ப்பம் அடைந்தார். 14 நாட்களுக்கு முன், இவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
ஆண் குழந்தையை எதிர்பார்த்திருந்த இம்ரான், பிறந்த பெண் குழந்தை மீது கோபம் கொண்டார். நேற்று காலையில் மனைவி முஸ்கான் வெளியே சென்றிருந்த நேரத்தில், பிறந்து, 14 நாட்களேயான தன் சொந்த மகளை, வீட்டின் தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்தார்.
சிறிது நேரத்துக்கு பின், வீட்டிற்கு வந்த முஸ்கான், குழந்தையை தேடிய போது, தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்ததை பார்த்து, அதிர்ச்சி அடைந்தார். கணவரின் செயலால் கோபமடைந்த அந்த பெண், சிக்கபல்லாபூர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அங்கு வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டனர். இம்ரானை கைது செய்தனர்.
இவரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என, குடும்பத்தினரும், கிராமத்தினரும் வலியுறுத்துகின்றனர்.
