தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று இனிதாக... 

 இன்று இனிதாக... 

 இன்று இனிதாக... 


ADDED : ஜூலை 23, 2026 11:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 11:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் ஆடி இரண்டாவது வெள்ளி ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமையை ஒட்டி, சிறப்பு அபிஷேகம் - அதிகாலை 4:00 மணி; சிறப்பு அலங்காரம் - 7:00 மணி; மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல் - 9:00 மணி. இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், ஸ்ரீராமுலா சன்னிதி தெரு, சிவாஜி நகர். தொடர்புக்கு: 98445 15555.

அபிஷேகம் - காலை 8.30 மணி; சிறப்பு அலங்காரம் -முற்பகல் 11.00 மணி; தீபாராதனை - பகல் 12.00 மணி: அன்னதானம் - பகல் 1.00 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி நகர். தொடர்புக்கு: 93432 11122

சத்துணவு அலங்காரம் - இரவு 7:00 மணி. இடம்: திருகதம்பாரண்ய ஆசிரமம், ஆசிர்கானா தெரு, சிவன் ஷெட்டி கார்டன். தொடர்புக்கு: 98450 16365.

அபிஷேகம் - காலை 5:00 மணி, ஸ்ரீசமயபுரம் மாரியம்மன் அலங்காரம், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - 8:00 மணி. இடம்: ஸ்ரீ சுயம்பு காளியம்மன் கோவில், பஜார் தெரு, ஹலசூரு. தொடர்புக்கு 94480 45533.

ஆடி திருவிழா ஸ்ரீ தேவி கருமாரியம்மனுக்கு, 501 பால்குட அபிஷேகம்; அலங்காரம்; மஹா மங்களாரத்தி; பிரசாத வினியோகம் - காலை 9:00 மணி. இடம்: ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில், எம்.ஜி.மார்க்கெட், ராபர்ட்சன் பேட்டை.

ஆடி ஏகாதசி மற்றும் கல்யாண உத்சவம் பாண்டுரங்க சமாஜ் சார்பில் ஆடி ஏகாதசி மற்றும் கல்யாண உத்சவத்தை ஒட்டி, மும்பை சுந்தர்ராமன் பாகவதர் குழுவினரின் பஜனை வடிவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் - காலை 9:00 மணி; ஆதித்யம் - மதியம் 1:30 மணி; ராமசந்திர பாகவதர் குழுவினரின் பஜனை வடிவில் பூர்ண புஷ்பகலா திருக்கல்யாணம் - மாலை 5:00 மணி. இடம்: ஸ்ரீ சீதா ராமா கல்யாண மண்டபம், சுப்பையனபாளையா எக்ஸ்டென்ஷன், பானஸ்வாடி பிதரான சாலை, பெங்களூரு. தொடர்புக்கு 98455 50693.

சண்டி ஹோமம் ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கோவிலில் ஸ்ரீ சண்டி ஹோமத்தை ஒட்டி, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவச்சனம், தேவி மஹாத்ம்ய பாராயணம், பிரம்மச்சாரி பூஜை, சுவாசினி பூஜை, கன்யா பூஜை, வடுக வைரவ பூஜை, சவுபாக்ய திரவ்ய ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ராதானம், கலச பிரதக் ஷிணை, கலச அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்கல் - காலை 7:00 மணி. இடம்: ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கோவில், பிரம்மபுரம், ஸ்ரீராமபுரம். தொடர்புக்கு: 94484 32389.

4 5ம் ஆண்டு, வேத பாராயண மஹோத்சவம் ஸ்ரீவித்யா அறக்கட்டளை பவுண்டேஷன் 45ம் ஆண்டு, வேத பாராயண மஹோத்சவத்தை ஒட்டி, விக்னேஸ்வர பூஜை, சண்முக அர்ச்சனை, தேவத அபிஷேகம், தீபாராதனை - காலை 7:00 முதல் 11:00 மணி வரை; லலிதா சஹஸ்ரநாமம் அர்ச்சனை - 11:30 முதல் மதியம் 1:00 மணி வரை; தீபாராதனை, பகவத் பிரசாதம் - 1:00 மணி; தமிழில் துஷ்யந்த் ஸ்ரீதரின் 'உன் சுந்தர காண்டம்' சொற்பொழிவு - மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை; தீபாராதனை, பகவத் பிரசாதம் வழங்கல் - 7:00 மணி. இடம்: ஸ்ரீ சூர்யநாராயண சுவாமி கோவில் கல்யாண மண்டபம், தொம்மலுார், பெங்களூரு. தொடர்புக்கு 99019 35506.

மண்டல பூஜை ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா.

லேசர் ஷோ அ வதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது மருத்துவ முகாம் ஹே.எஸ்.எஸ்., ஆயுர்வேத மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் - காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், ஆலனஹள்ளி, மைசூரு. தொடர்புக்கு: 89703 22532.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us