/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை
/
2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை
ADDED : ஏப் 11, 2025 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாவணகெரே: மனைவியின் இறப்பால் மனம் நொந்த நபர், தன் இரண்டு குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.
தாவணகெரே நகரின், எஸ்.பி.எஸ்., நகரில் வசிப்பவர் உதய், 35. இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது. தம்பதிக்கு சிந்து ஸ்ரீ, 4, என்ற மகளும், ஸ்ரீஜெய், 3, என்ற மகனும் இருந்தனர்.
இந்நிலையில் நோயால் அவதிப்பட்ட உதயின் மனைவி, மூன்று மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். மனைவியை இழந்த உதய் மன அழுத்தத்துக்கு ஆளானார். நேற்று மதியம் தன் குழந்தைகளை துாக்கிட்டு கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.