தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பைக்கில் சென்ற தந்தை, மகள் பலி

பைக்கில் சென்ற தந்தை, மகள் பலி

பைக்கில் சென்ற தந்தை, மகள் பலி


UPDATED : அக் 16, 2026 12:00 AM

ADDED : அக் 15, 2026 08:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 12:00 AM ADDED : அக் 15, 2026 08:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெலகாவி: வேகமாக வந்த லாரி மோதியதில், போலீஸ் ஏட்டு மற்றும் அவரது மகள் உயிரிழந்தனர்.

பெலகாவி மாவட்டம், ஹுக்கேரி தாலுகாவின், உள்ளாகட்டி கானாபுரா கிராமத்தில் வசித்தவர் புன்டலீக ஹட்டி, 50. இவர் நிப்பானி நகர் போலீஸ் நிலையத்தில், ஏட்டாக பணியாற்றினார். இவரது மகள் நிகிதா, 24. தந்தையும், மகளும் நேற்று காலை பணி நிமித்தமாக, பைக்கில் புறப்பட்டனர்.

நிப்பானி புறநகரின், தேசிய நெடுஞ்சாலையின், ஸ்வநிமி காட்டில் செல்லும் போது, ஸ்பீடு பிரேக்கர் இருந்ததால், புன்டலீக ஹட்டி, பைக்கை திடீரென நிறுத்தினார்.

அப்போது பின்னால் வந்த லாரி மோதியது. இதில், தந்தையும், மகளும் கீழே விழுந்தனர். அவர்கள் மீது லாரி மோதியதால், சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தால், நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த நிப்பானி போலீசார், உடல்களை மீட்டு, வாகன போக்குவரத்தை சரி செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us