/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாலை பள்ளத்தால் விபத்து ஐ.டி., பெண் ஊழியர் பலி
/
சாலை பள்ளத்தால் விபத்து ஐ.டி., பெண் ஊழியர் பலி
ADDED : அக் 25, 2025 11:05 PM

மாதநாயக்கனஹள்ளி: சாலைப் பள்ளத்தை தவிர்க்க முயன்றபோது, பைக்கில் இருந்து சாலையில் விழுந்த ஐ.டி., பெண் ஊழியர் மீது, லாரி ஏறி இறங்கியது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் பிரியங்கா, 25. பெங்களூரு ரூரல் மாதநாயக்கனஹள்ளியில் உள்ள சகோதரர் வீட்டில் தங்கியிருந்து, ஒயிட்பீல்டில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்தார்.
நேற்று காலையில் வேலைக்கு செல்ல, சகோதரருடன் பைக்கில் மாதவரா மெட்ரோ ரயில் நிலையம் சென்றார். ஏ.பி.எம்.சி., மார்க்கெட் சாலையில் சென்றபோது, சாலைப் பள்ளத்தை தவிர்க்க, பிரியங்காவின் சகோதரர் பைக்கை திருப்பினார்.
கட்டுப்பாட்டை இழந்ததால், பைக்கில் இருந்த பிரியங்கா, சாலையில் தவறி விழுந்தார். பின்னால் வந்த லாரி, பிரியங்கா மீது ஏறி இறங்கியது. சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். நெலமங்களா போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

