/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெண் வக்கீல் மர்ம சாவு; வாலிபர் தற்கொலை
/
பெண் வக்கீல் மர்ம சாவு; வாலிபர் தற்கொலை
ADDED : ஏப் 26, 2025 09:21 AM

நெலமங்களா பெங்களூரு அருகே, பெண் வக்கீல் மர்ம முறையில் இறந்துகிடந்தார். தம்பி என்ற முறையில் பழகிய வாலிபர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு ரூரல் நெலமங்களா அருகே சீனிவாசபுரா கிராமத்தை சேர்ந்தவர் ரம்யா, 27. வக்கீல். நெலமங்களா நீதிமன்றத்தில் பணி செய்யும் வக்கீல் ஒருவரின் உதவியாளராக இருந்தார். ரம்யாவுக்கு திருமணம் ஆகவில்லை.
இவரது பண்ணை வீட்டில் புனித், 24, என்பவர் வேலை செய்தார். ரம்யாவும், புனித்தும் அக்கா, தம்பி போன்று பழகி வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு பண்ணை வீட்டின் ஒரு அறையில், மர்மமான முறையில் ரம்யா துாக்கில் தொங்கினார். அவரது கால் தரையை தொட்ட நிலையில் இருந்தது. இதுபற்றி நெலமங்களா ரூரல் போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் கெம்பலிங்கனஹள்ளி என்ற கிராமத்தில் உள்ள தன் வீட்டில் புனித் நேற்று துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ரம்யா இறந்ததால் புனித்தும் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கிராம மக்கள் கூறினர். ஆனால் காதல் விவகாரத்தில் ரம்யாவை கொன்றுவிட்டு, புனித்தும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.