/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெலகாவி மாவட்ட அதிகாரத்தை கைப்பற்ற கட்டி, ஜார்கிஹோளி இடையே கடும் போட்டி
/
பெலகாவி மாவட்ட அதிகாரத்தை கைப்பற்ற கட்டி, ஜார்கிஹோளி இடையே கடும் போட்டி
பெலகாவி மாவட்ட அதிகாரத்தை கைப்பற்ற கட்டி, ஜார்கிஹோளி இடையே கடும் போட்டி
பெலகாவி மாவட்ட அதிகாரத்தை கைப்பற்ற கட்டி, ஜார்கிஹோளி இடையே கடும் போட்டி
ADDED : ஆக 20, 2025 07:56 AM

பெலகாவி : பெலகாவி மாவட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில் மறைந்த பா.ஜ., அமைச்சர் உமேஷ் கட்டி மற்றும் சதீஷ் ஜார்கிஹோளி குடும்பங்கள் இடையே நிலவும் போட்டி, தற்போது மாவட்டத்தில் சக்தி வாய்ந்த நிறுவனங்களை கைப்பற்றுவதிலும் தொடருகிறது.
பல்லாரி என்றால் ரெட்டி சகோதரர்கள் போன்று, பெலகாவி என்றால், உமேஷ் கட்டி மற்றும் சதீஷ் ஜார்கிஹோளி குடும்பங்கள் தான் அனைவரின் நினைவுக்கும் வரும். மாநிலத்தில் பா.ஜ., காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இம்மாவட்டத்தை சேர்ந்த இரு குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவி உறுதி.
மாவட்டத்தின் சங்கேஸ்வரில் உள்ள ஹிரண்யகேஷி கூட்டுறவு சர்க்கரை தொழிற்சாலை; எச்.ஆர்.இ.சி.எஸ்., எனும் ஹுக்கேரி கிராமப்புற மின்சார கூட்டுறவு சங்கம்; பி.டி.சி.சி., எனும் பெலகாவி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவை, கட்டி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
கர்நாடக கூட்டுறவு துறையின் பீஷ்மராக கருதப்படும் அப்பன்னகவுடா பாட்டீல், 1980ல் எச்.ஆர்.இ.சி.எஸ்.,சை நிறுவினார். இதன் மூலம் மாவட்டத்தில் கூட்டுறவு இயக்கத்துக்கு உத்வேகத்தை தந்தார்.
பி.டி.சி.சி., வங்கி, கர்நாடகாவின் முன்னணி கூட்டுறவு வங்கிகளில், ஒன்றாக பல ஆண்டுகளாக செல்வாக்குமிக்கதாக இருந்து வருகிறது. தற்போது, எச்.ஆர்.இ.சி.எஸ்., கட்டி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்தாண்டு முன்னாள் அமைச்சர் உமேஷ் கட்டியின் மரணத்துக்கு பின், கட்டி குடும்பத்தின் பிடி பலவீனமடைந்து வருகிறது.
தொழில் துறையில் ஆதிக்கம் செலுத்திய சக்தி வாய்ந்த நிறுவனங்களை கைப்பற்றுவதில், ஜார்கிஹோளி குடும்பம் தீவிரம் காட்டி வருகிறது.
அதற்கு ஏற்றார்போல், சமீபத்தில் பி.டி.சி.சி., எனும் பெலகாவி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பதவியில் இருந்து முன்னாள் எம்.பி., ரமேஷ் கட்டியை அகற்றுவதில் சதீஷ் ஜார்கிஹோளியின் சகோதரர் பாலசந்திர ஜார்கிஹோளி தலைமையிலான குழுவினர் வெற்றி பெற்றனர்.
அதுபோன்று, அக்டோபர் 19ம் தேதி நடக்கும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தலில், தங்கள் ஆதரவு உறுப்பினர்களை வெற்றி பெற வைப்பதில் இரு குடும்பத்தினரும் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கு பதிலடி தரும் வகையில் கட்டி குடும்பத்தினரும் வியூகம் அமைத்து வருகின்றனர்.