/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பீடி, சிகரெட் துண்டுகளை வீசுவோருக்கு அபராதம்
/
பீடி, சிகரெட் துண்டுகளை வீசுவோருக்கு அபராதம்
ADDED : ஏப் 28, 2025 05:09 AM
பெங்களூரு: கண்ட, கண்ட இடங்களில் பீடி, சிகரெட் புகைத்து வீசி எறிவோருக்கு அபராதம் விதிக்க, பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பீடி மற்றும் சிகரெட் புகைப்பதால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதில் இருந்து வெளியேறும் புகையால், காற்று மாசடைகிறது. சுற்றுச்சூழல் அசுத்தமடைகிறது.
பொது இடங்களில் புகை பிடிப்பதை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்கும்படி, தேசிய பசுமை தீர்ப்பாயம் 2015ல் உத்தரவிட்டது.
மாநகராட்சியும் பொது இடங்களில், பீடி, சிகரெட் புகைக்க தடை விதித்திருந்தது. இந்த விதிமுறை கடுமையாக செயல்படுத்தப்படவில்லை. கண்ட இடங்களில் பீடி, சிகரெட் புதைத்து துண்டுகளை வீசுகின்றனர். இதை தீவிரமாக கருதிய பெங்களூரு மாநகராட்சி, தற்போது விதிமுறையை கடுமையாக்க முன் வந்துள்ளது.
பலரும் மளிகைக்கடை, வர்த்தக வளாகங்கள், பார் மற்றும் ரெஸ்டாரென்ட்கள், பஸ் நிலையங்கள் உட்பட பொது இடங்களில் பீடி, சிகரெட் துண்டுகளை வீசுகின்றனர். இவற்றை அப்புறப்படுத்துவது, துப்புரவு தொழிலாளர்களுக்கு, பெரும் பிரச்னையாக உள்ளது. சுற்றுச்சூழலும் மாசடைகிறது.
எனவே கண்ட கண்ட இடங்களில் பீடி, சிகரெட் புகைத்து வீசி எறியும் நபர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்க, பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

