/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறார்களை கவரும் பட்டாசுகள் தமிழகம் செல்லும் கர்நாடக மக்கள்
/
சிறார்களை கவரும் பட்டாசுகள் தமிழகம் செல்லும் கர்நாடக மக்கள்
சிறார்களை கவரும் பட்டாசுகள் தமிழகம் செல்லும் கர்நாடக மக்கள்
சிறார்களை கவரும் பட்டாசுகள் தமிழகம் செல்லும் கர்நாடக மக்கள்
ADDED : அக் 20, 2025 07:02 AM

பெங்களூரு: தீபாவளி பண்டிகை என்பதால், பலவிதமான பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. சிறார்களை கவரும் வகையில் புதிய பட்டாசுகளும் மார்க்கெட்டில் குவிந்துள்ளன.
வழக்கம் போன்று, இம்முறையும் கர்நாடகா - தமிழகம் எல்லையில் உள்ள ஓசூர் சாலையில், அத்திப்பள்ளி, சூர்யா நகர் உட்பட பெங்களூரின் பல்வேறு இடங்களில், நுாற்றுக்கணக்கான பட்டாசு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பல்வேறு புதிய ரக பட்டாசுகள், சிறார்களை சுண்டி இழுக்கின்றன.
மஹாராஜாக்களின் காலத்து வாள், பீட்சா பட்டாசுகளை சிறார்கள் விரும்பி வாங்குகின்றனர். விசில் வரும் பூமி சக்கரம், தர்ப்பூசணி, துப்பாக்கி உட்பட பல வடிவங்களில் பட்டாசுகள் அமோகமாக விற்கப்படுகின்றன. உண்மையான துப்பாக்கி போன்று தென்படும் துப்பாக்கி விலை 600 ரூபாய் வரை உள்ளது. சாதாரண துப்பாக்கி 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
கர்நாடகாவை விட, தமிழக பகுதிகளில் அதிகமான பட்டாசு கடைகள் உள்ளன. இவற்றில் பட்டாசு வாங்குவோரில் 90 சதவீதம் கர்நாடகத்தவரே என்பது குறிப்பிடத்தக்கது. அவரவர் வசதிக்கேற்ப பட்டாசு வாங்கி செல்கின்றனர். பெங்களூரு, மைசூரு, மங்களூரு, பெலகாவி உட்பட பல மாவட்டங்களில் இருந்தும் தமிழகத்துக்கு சென்று, பட்டாசு வாங்கி வருகின்றனர்.
பட்டாசு தயாரிப்பில், நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ள சிவகாசியில் இருந்து, பட்டாசு வாங்கி வந்து விற்பதால், மக்களுக்கு குறைந்த விலையில் பட்டாசுகள் கிடைக்கின்றன. பெங்களூரு,மங்களூரு என, கர்நாடக நகரங்களில் விலை அதிகம் என்பதால், இங்கிருந்து பலரும் தமிழகத்துக்கு சென்று பட்டாசு வாங்கி வருகின்றனர். தீபாவளிக்கு நான்கைந்து நாட்களுக்கு முன்பே, ஓசூருக்கு சென்று பட்டாசு வாங்கி வருவது வழக்கம். பலரும் பிள்ளைகளை அழைத்து வந்து, அவர்களுக்கு பிடித்தமான பட்டாசுகளை வாங்கி தருகின்றனர்.
தற்போது சுற்றுச் சூழலுக்குபாதிப்பில்லாத, பசுமை பட்டாசுகளும் அதிகமாக விற்பனை யாகின்றன. இது குறித்து, மாசுக்கட்டுப்பாடு வாரியம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. ஆனால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான பட்டாசுகளும் அதிகமாக விற்கப்படுகின்றன.