/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பாலியல் தொல்லை வழக்கில் ஐவர் கைது
/
பாலியல் தொல்லை வழக்கில் ஐவர் கைது
ADDED : ஜூன் 27, 2025 06:55 AM
பன்னர்கட்டா: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தலைமறைவாக இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு, மைலசந்திரா ரேணுகா எல்லம்மா லே - அவுட்டில் வசிப்பவர் 25 வயது இளம்பெண். கடந்த 22ம் தேதி மாலை 4:30 மணிக்கு கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, இளம்பெண்ணை சூழ்ந்து கொண்டு 5 பேர் பாலியல் தொல்லை கொடுத்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளம்பெண் அளித்த புகாரில் பன்னர்கட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சம்பவம் நடந்த இடத்தில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் ஐந்து பேரையும் போலீசார் அடையாளம் கண்டனர்.
வீரசந்திராவை சேர்ந்த புனித், 22, அனுஷ் மதன், 20, அருண், 20, கனிக்யா சாமி, 50, ஜான் ரிச்சர்ட், 24, ஆகிய ஐந்து பேரும் தலைமறைவாக இருந்தனர். ஆனேக்கல்லில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த அவர்களை, பன்னர்கட்டா போலீசார் நேற்று கைது செய்தனர்.