தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சாலை விபத்தில் ஐவர் உயிரிழப்பு

 சாலை விபத்தில் ஐவர் உயிரிழப்பு

 சாலை விபத்தில் ஐவர் உயிரிழப்பு


ADDED : மே 28, 2026 02:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 02:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சித்ரதுர்கா: சாலை ஓரத்தில் நின்றிருந்த லாரி மீது, ஜீப் வாகனம் மோதியதில் ஒரே குடும்பத்தில் ஐவர் உயிரிழந்தனர்.

சித்ரதுர்கா மாவட்டம், மொல்காள்மூரு தாலுகாவின், பைராபுரா கிராமத்தின் அருகே, நேற்று மதியம் மகிந்திரா பொலிரோ ஜீப் வாகனம் வேகமாக சென்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பொலிரோ, சாலை ஓரத்தில் நின்றிருந்த லாரி மீது மோதியது.

இதில், பயணித்த வெங்கடேஷ், 28, சிவம்மா, 25, மீனாட்சி, 16, பூஜா, 4, பரசுராம், 15, ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

விபத்தில் இறந்த ஐவரும், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். பல்லாரியில் வசித்தவர்கள். தகவலறிந்து அங்கு வந்த மொல்காள்மூரு போலீசார், உடல்களை மீட்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவாகியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us