/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பங்குனி உத்திர திருவிழா 5ம் தேதி கொடியேற்றம்
/
பங்குனி உத்திர திருவிழா 5ம் தேதி கொடியேற்றம்
ADDED : ஏப் 03, 2025 07:46 AM
பத்ராவதி : பத்ராவதி பத்ரகிரி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழா 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
ஷிவமொக்கா மாவட்டத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான, பத்ராவதியின் பத்ரகிரியில் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும், பங்குனி உத்திர திருவிழா பிரசித்தி பெற்றது.
இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா வரும் 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காலை 11:00 மணியில் இருந்து மதியம் 12:00 மணிக்குள், மிதுன லக்னத்தில் கொடியேற்றப்படுகிறது.
வரும் 10ம் தேதி இரவு 7:00 மணிக்கு படி பூஜை; இரவு 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை. வரும் 11ம் தேதி பங்குனி உத்திர திருவிழாவை ஒட்டி அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம்; காலை 5:00 மணிக்கு விளா பூஜை; காலை 6:30 மணிக்கு தீர்த்தகாவடிகள், கூடபள்ளி சங்கமம்.
தீர்த்த அபிஷேகம்; காலை 8:00 மணிக்கு காலை சந்திபூஜை; காலை 9:00 மணிக்கு சிறுகாலை சந்தி பூஜை; மதியம் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை; மாலை 5:30 மணிக்கு தீபாராதனை; இரவு 10:00 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடக்கிறது.
வரும் 14ம் தேதி பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.