எதிரிகள் திடீர் நண்பராகினர் விஜயேந்திரா - ஹரிஷ் நெருக்கம்
எதிரிகள் திடீர் நண்பராகினர் விஜயேந்திரா - ஹரிஷ் நெருக்கம்
ADDED : ஆக 18, 2026 07:45 PM
பெங்களூரு: எதிரிகளாக இருந்த பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் திடீரென நண்பராகியுள்ளனர்.
கர்நாடக பா.ஜ., தலைவர் பதவியில் இருந்து விஜயேந்திராவை நீக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்திற்கு, பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் தலைமையிலான குழு அழுத்தம் கொடுத்து வந்தது. இந்த குழுவில் தாவணகெரேயின், ஹரிஹரா தொகுதி, பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷும் இருந்தார்.
அவர் பல சந்தர்ப்பங்களில் விஜயேந்திராவை வெளிப்படையாக தாக்கி பேசினார். இருவரும் எதிரிகள் போன்றே செயல்பட்டு வந்தனர். அருகருகே அமர்ந்து, நீண்ட நேரமாக விவாதிக்கின்றனர்.
நேற்று மதியம் சட்டசபையின் எம்.எல்.ஏ.,க்கள் ஓய்வு பகுதியில், விஜயேந்திராவும், ஹரிஷும் ஏதோ சிரித்து பேசினர். இருவரின் நெருக்கம் கட்சிக்கு நல்லது என்று தாவணகெரே மாவட்ட பா.ஜ.,வினர் பேசி கொள்கின்றனர்.
