'ம.ஜ.த.,வில் இருந்திருந்தால் அமைச்சராகி இருக்க மாட்டேன்'
'ம.ஜ.த.,வில் இருந்திருந்தால் அமைச்சராகி இருக்க மாட்டேன்'
ADDED : ஆக 18, 2026 07:45 PM
ஹாசன்: ''இன்னும் 10 ஆண்டுகள் நான், ம.ஜ.த.,விலேயே இருந்திருந்தாலும் அமைச்சராகி இருக்க மாட்டேன்,'' என, கலால் துறை அமைச்சர் சிவலிங்கே கவுடா கூறியுள்ளார்.
ஹாசனில் அவர் அளித்த பேட்டி:
நான்கு முறை அரிசிகெரே தொகுதி மக்கள் என்னை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற செய்துள்ளனர். மக்கள் ஆசீர்வாதத்தால் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
ம.ஜ.த.,வில், 15 ஆண்டுகள் எம்.எல்.ஏ.,வாக இருந்தேன். ஆனாலும் அவர்கள் என்னை மதிக்கவில்லை. அந்த கட்சியில் இன்னும், 10 ஆண்டுகள் இருந்திருந்தாலும் அமைச்சராகி இருக்க மாட்டேன். காங்கிரசுக்கு வந்த மூன்று ஆண்டுகளில் அமைச்சராகி விட்டேன்.
அரிசிகெரேயில் தொகுதியில், எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்ற யாரும் அமைச்சராக இருந்தது இல்லை என்ற குறை, இப்போது நீங்கியுள்ளது. எனது தொகுதியை முன்மாதிரியாக மாற்றி காட்டுவேன். எனக்கு கொடுத்த கலால் துறையை திறம்பட நிர்வகிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
