/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் ரத்து உணவு அமைச்சர் முனியப்பா பதில்
/
பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் ரத்து உணவு அமைச்சர் முனியப்பா பதில்
பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் ரத்து உணவு அமைச்சர் முனியப்பா பதில்
பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் ரத்து உணவு அமைச்சர் முனியப்பா பதில்
ADDED : ஆக 19, 2025 02:37 AM

பெங்களூரு : ''தகுதியவற்றவர்களின் பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும். இதற்கான பணிகள் சட்டசபை கூட்டத்தொடர் முடிந்தவுடன் துவக்கப்படும்,'' என, மாநில உணவு, பொது விநியோகத் துறை அமைச்சர் முனியப்பா தெரிவித்தார்.
மேல்சபையில் கேள்வி நேரத்தின்போது, பா.ஜ., - எம்.எல்.ஏ., பிரதாப் சிம்ஹா நாயக், மாநிலத்தில் புதிய பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் முனியப்பா கூறியதாவது:
கர்நாடகாவில் 74 சதவீதம் பேர் பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் பயன்படுத்துகின்றனர். இதுபோன்று, அதிக எண்ணிக்கையில் வேறு எந்த தென் மாநிலங்களிலும், பி.பி.எல்., கார்டுகள் பயன்படுத்தப்படவில்லை.
கர்நாடகாவில் 1.28 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி வழங்கப்படுகிறது. ஏ.பி.எல்., கார்டுதாரர்கள், பி.பி.எல்., கார்டுகளை பெற்றுள்ளனர். தகுதியற்றவர்களின் பி.பி.எல்., கார்டுகள் ரத்து செய்யப்படும். அவர்களுக்கு ஏ.பி.எல்., கார்டுகள் வழங்கப்படும். இதற்கான பணிகள் சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் துவங்கும். மாநிலத்தில் 25 லட்சம் பேர் ஏ.பி.எல்., கார்டுகள் வைத்துள்ளனர். இவர்களில், 1 லட்சம் பேர் மட்டுமே, அரிசி வாங்குகின்றனர். எனவே, ஏ.பி.எல்., கார்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டது. தேவைப்பட்டால் மட்டுமே ஏ.பி.எல்., கார்டுகள் வழங்கப்படும்.
மாநிலத்தில் 3.27 லட்சம் பேர், பி.பி.எல்., கார்டுகள் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.