/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கால்பந்து போட்டி ரசிகர்கள் அடிதடி
/
கால்பந்து போட்டி ரசிகர்கள் அடிதடி
ADDED : நவ 25, 2025 06:01 AM

குடகு: கால்பந்து போட்டியின்போது இரு அணி ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால், போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
குடகு மாவட்டம், விராஜ்பேட் தாலுகா விளையாட்டு மைதானத்தில் கால் பந்து போட்டி கடந்த நான்கு நாட்களாக நடந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு கதங்கா அணிக்கும், சுன்டிகொப்பா அணிக்கும் இடையே போட் டி நடந்தது.
ஆட்டத்தின் முடிவில், சுன்டிகொப்பா அணி வெற்றி பெற்றது. அந்த அணி வீரர்கள், ரசிகர்கள் மைதானத்தில் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.
கோபமடைந்த கதங்கா அணி ரசிகர்கள், சுன்டிகொப்பா ரசிகர்கள் மீது நாற்காலிகளை வீசினர். இருதரப்பினரும் மாறி, மாறி நாற்காலிகளை வீசிக் கொண்டனர்.
கைகலப்பு எல்லை மீறியதால், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், லேசான தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர். அதன் பின், இறுதி போட்டி நடந்தது.

