தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மைசூரு தசரா யானை தேர்வு குறித்து வனத்துறை விளக்கம்

மைசூரு தசரா யானை தேர்வு குறித்து வனத்துறை விளக்கம்

மைசூரு தசரா யானை தேர்வு குறித்து வனத்துறை விளக்கம்


UPDATED : அக் 29, 2026 12:00 AM

ADDED : அக் 28, 2026 11:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 12:00 AM ADDED : அக் 28, 2026 11:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மைசூரு: ‘மைசூரு தசராவில் தங்க அம்பாரியை சுமந்து செல்லும் யானையை தேர்வு செய்வது முற்றிலும் அறிவியல் பூர்வமானது’ என வனத்துறை தெரிவித்துள்ளது.

மைசூரு வனச்சரக துணை வனப்பாதுகாவலர் ராஜாமேட்டி கூறியதாவது:

இந்த ஆண்டு தசரா கொண்டாட்டத்தின் போது பல்வேறு முகாம்களிலிருந்து, 13 யானைகள் மைசூரு அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டன.

இதில், மகேந்திரா, சுக்ரீவா, தனஞ்செயா, ஏகலாவா, பிரஷாந்த் ஆகிய யானைகள் மணல் மூட்டைகள் நிரப்பப்பட்ட மரப்பெட்டிகளை சுமக்க வைத்து, எடையைத் தாங்கும் சக்தி இருக்கிறதா என சோதனை செய்யப்பட்டது.

இப்பயிற்சியில் பிரஷாந்த் யானை சிறப்பாக செயல்பட்டதால், தங்க அம்பாரியை சுமக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. இது குறித்து, மைசூரு மன்னர் குடும்பத்தின் பிரமோதா தேவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதுபோல, மைசூரு தசரா பண்டிகையில் பாதுகாப்பு குறைபாடு இருந்ததாக மைசூரு மன்னர் குடும்பத்தினரின் குற்றச்சாட்டுக்கு, மைசூரு நகர போலீசாரும் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us