தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மூர்க்கமாக மோதி கொண்ட யானைகள் கிராமத்தினருக்கு வனத்துறை எச்சரிக்கை

மூர்க்கமாக மோதி கொண்ட யானைகள் கிராமத்தினருக்கு வனத்துறை எச்சரிக்கை

மூர்க்கமாக மோதி கொண்ட யானைகள் கிராமத்தினருக்கு வனத்துறை எச்சரிக்கை


UPDATED : அக் 27, 2026 03:39 AM

ADDED : அக் 26, 2026 10:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 03:39 AM ADDED : அக் 26, 2026 10:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹாசன்: உணவு தேடி வந்த யானைகள் கூட்டத்தில் இரு யானைகள் திடீரென மூர்க்கமாக சண்டையிட்டதை பார்த்த கிராமத்தினர் அச்சத்தில் உள்ளனர்.

ஹாசன் மாவட்டம், பேலுார் தாலுகாவின் ஜகபோரணஹள்ளி கிராமம் அருகில் நேற்று காலை உணவு தேடி யானைகள் கூட்டம் வந்தது. இதில் இரு ஆண் யானைகள், ஒன்றுடன் ஒன்று திடீரென மூர்க்கமாக மோதி கொண்டன. தந்தங்களால் குத்தியதுடன், தும்பிக்கையாலும் தாக்கின.

யானைகளின் பிளிறல் சத்தத்தை கேட்டு, பண்ணையில் இருந்த நாய் ஒன்று குரைக்க துவங்கியது.இதனால் மேலும் கோபமடைந்த யானைகள், நாயை தாக்க முற்பட்டன. அதற்குள் நாய் அங்கிருந்து ஓடிவிட்டது. ஆனாலும், இரு யானைகளும் தொடர்ந்து தாக்கி கொண்டன.

இது தொடர்பாக, யானைகள் தடுப்பு படையினருக்கு கிராமத்தினர் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அவர்கள், யானைகளை பிரித்து, வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி எடுத்துள்ளனர்.

அதேவேளையில், கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

'யானைகள் இரண்டும் மூர்க்கமாக உள்ளன. எனவே, கிராம மக்களோ, விவசாயிகளோ எந்த காரணத்துக்காகவும் அவற்றின் அருகில் செல்ல வேண்டாம். யானைகள் சண்டையிடுவதை நின்று பார்ப்பதை தவிர்க்கவும்.

'யானைகளை புகைப்படம் எடுப்பது, வீடியோ, ரீல்ஸ்கள் எடுப்பது கூடாது. அவற்றின் மீது கற்கள் வீசக்கூடாது. மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்துள்ளனர்.

தற்போது யானைகள் முகாட்டுள்ள பகுதியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us