UPDATED : அக் 10, 2026 12:00 AM
ADDED : அக் 09, 2026 07:54 PM
அ நிறம் | அளவு
தார்வாட்: சாலையில் சென்ற கார் மீது, எதிரே வந்த லாரி மோதியதில் நால்வர் உயிரிழந்தனர்.
தார்வாட் மாவட்டம், நவலகுந்த் தாலுகாவின் அமரகோளா கிராமத்தின் அருகில் நேற்று காலையில், கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வேகமாக வந்த லாரி, காருடன் மோதியது. இதில் காரில் பயணித்த, அஜித், 32, ராகேஷ், 23, சந்தீப், 33, ஸ்ருதி, 28, ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
இவர்களில், அஜித் விஜயபுரா மாவட்டம், பசவனபாகேவாடி தாலுகாவின் மலகானா கிராமத்தை சேர்ந்தவர். ராகேஷ், சந்தீப் ஆகியோர் சடசனா தாலுகாவின் பாரடோலி கிராமத்தையும், ஸ்ருதி சித்தாபுராவையும் சேர்ந்தவர்கள்.
இவர்கள் ஹூப்பள்ளியில் இருந்து விஜயபுராவுக்கு செல்லும் போது, விபத்து நடந்துள்ளது. லாரி ஓட்டுநரின் அலட்சியத்தால் இச்சம்பவம் நடந்துள்ளது.
