தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நண்பரை கல்லால் அடித்து கொன்ற ரவுடி உட்பட நான்கு பேர் கைது 

 நண்பரை கல்லால் அடித்து கொன்ற ரவுடி உட்பட நான்கு பேர் கைது 

 நண்பரை கல்லால் அடித்து கொன்ற ரவுடி உட்பட நான்கு பேர் கைது 


ADDED : மார் 17, 2026 06:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 06:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பன்னர்கட்டா: உணவு வாங்கி வராததால், நண்பரை கல்லால் அடித்துக் கொன்ற ரவுடி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு பன்னர்கட்டா கெம்பநாயக்கனஹள்ளியில் வசித்தவர் திலக், 23. இவரது நண்பர் அஜய், 25. ரவுடியான இவர் மீது கொலை முயற்சி, மிரட்டி பணம் பறிப்பு, கொள்ளை உட்பட, 30 வழக்குகள் உள்ளன. போலீஸ் கையில் சிக்காமல் வனப்பகுதியில் தலைமறைவாக வசித்தார். கடந்த, 5ம் தேதி திலக்கிடம் 1,000 ரூபாய் கொடுத்த அஜய், ஹோட்டலுக்கு சென்று உணவு வாங்கி வரும்படி கூறினார். ஆனால், திலக் உணவு வாங்கித் தரவில்லை. 8ம் தேதி இரவு அஜயை சந்தித்த திலக் பணத்தை திரும்ப கொடுத்தார்.

ஏன் உணவு வாங்கி வரவில்லை என்று கேட்ட போது, என் காதலி அழைத்ததால் அவருடன் சென்று விட்டேன் என, திலக் கூறியுள்ளார். கோபம் அடைந்த அஜய், 'என்னை விட உனக்கு காதலி பெரிதாக போய் விட்டாளா' என்று கேட்டு திலக்கை தாக்கினார்.

அதுமட்டுமின்றி, தன் நண்பர்களான ரவிசந்திரா என்கிற பாய்சன் ரவி, 24, சஞ்சய், 26, முகமது ரசாக், 24 ஆகியோரையும் வரவழைத்தார். நான்கு பேரும் சேர்ந்து திலக்கை சரமாரியாக தாக்கியதுடன் கல்லால் அடித்தனர். மண்டை உடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே திலக் இறந்தார்.

அவரது சகோதரர் அளித்த புகாரில், பன்னர்கட்டா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வனப்பகுதியில் பதுங்கி இருந்த அஜய் உட்பட நான்கு பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us