/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மணம் வீசும் மணப்பட்டி சிக்கன் சுக்கா
/
மணம் வீசும் மணப்பட்டி சிக்கன் சுக்கா
ADDED : ஆக 30, 2025 03:38 AM

மணப்பட்டி மட்டன் சுக்கா எப்படி பிரபலமோ, அதே அளவுக்கு மணப்பட்டி சிக்கன் சுக்காவும் பிரபலமானது. இதை செய்ய வெங்காயம், தக்காளி எதுவும் தேவையில்லை. இந்த டிஷ்ஷில் சீரகத்துாள் அதிகம் சேர்ப்பது தான் ஹைலைட். இந்த அருமையான சிக்கன் சுக்காவை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என எல்லாத்துக்குமே தொட்டு சாப்பிடலாம். அதுவும் சுடு சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும்.
செய்முறை: ஒரு வாணலியில் சிக்கனை போட்டு நன்கு வதக்கவும். சிக்கனிலிருந்து தண்ணீர் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கவும். இந்த தண்ணீரை கரண்டி வைத்து, வாணலியில் இருந்து எடுக்க வேண்டும். பிறகு, வாணலியில் உள்ள சிக்கன் மீது மிளகாய் துாள், மஞ்சள் துாள், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
இத்துடன் இடித்த இஞ்சி, இடித்த பூண்டை சேர்த்து நன்றாக வதக்கவும். பின், சீரகத்துாள் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு நெய் சேர்த்து லேசாக வதக்கவும். இறுதியாக கறிவேப்பிலை, முந்திரி பருப்பு சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான மணப்பட்டி நெய் சிக்கன் சுக்கா தயார்.
இதை வீடுகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து குடும்பத்தினர் மத்தியில் நல்ல பெயர் வாங்கலாம்.
- நமது நிருபர் -