ADDED : ஏப் 02, 2025 06:14 AM
தங்கவயல்: தங்கவயலில் கால்பந்து விளையாட்டுக்கு தனி சிறப்பு உண்டு. தங்கவயலை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மாநில அளவில் மட்டுமின்றி, அகில இந்திய அளவிலும் பெயர் பெற்று உள்ளனர். வெளிநாடுகளிலும் சென்று விளையாடி புகழ் பெற்ற வரலாறும் உண்டு.
கால்பந்தில் புகழ்பெற்று விளங்கும் வகையில், தங்கவயலில் மீண்டும் வீரர்களை உருவாக்கும் நோக்கில், 6 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இரு பாலருக்கும் ஏப்ரல், மே மாதங்களில் இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை, தங்கவயலில் உள்ள ஒருங்கிணைந்த கால்பந்து கிளப்களின் தலைவர் ரகுகுமார் செய்துள்ளார்.
கால்பந்து இலவச பயிற்சி முகாம், மூன்றாம் ஆண்டாக, இம்மாதம் 10ம் தேதி அம்பேத்கர் உயர்நிலைப்பள்ளியில் துவங்கப்படுகிறது.
தினமும் மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். வீரர்கள் டி.நவீன், ஏ.ரவி, எல்.தீபு ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர்.