'டைப் - 1' நீரிழிவு நோயால் பாதித்த சிறுவர்களுக்கு இலவசமாக இன்சுலின்
'டைப் - 1' நீரிழிவு நோயால் பாதித்த சிறுவர்களுக்கு இலவசமாக இன்சுலின்
ADDED : மார் 07, 2026 06:16 AM

சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் l கடந்தாண்டு பிரசவத்தின் போது, தாய்வழி இறப்பு தடுப்பதற்காக துவங்கிய, 'மிஷன் பூஜ்யம்' திட்ட முயற்சியின் விளைவாக, தாய்வழி இறப்பு, 24 சதவீதம் குறைந்து உள்ளது. மகப்பேறு மருத்துவமனைகளுக்கு பொருத்தமான வழிகாட்டுதல், கூடுதல் மனித வளங்கள் மற்றும் நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன
l கடந்தாண்டு, 52 லட்சம் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ரத்தசோகை பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட 11.7 லட்சம் பேருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. அவர்களில், 3.7 லட்சம் பேர் முழுமையாக குணமடைந்து உள்ளனர்
l ஆரம்ப சுகாதார மையங்கள், சமுதாய சுகாதார மையங்கள், தாலுகா மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு, 900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
l ஏழைகளுக்கு தரமான சுகாதார சேவை வழங்குவதற்காக, 'ஆயுஷ்மான் பாரத் - ஆரோக்கிய கர்நாடகா' திட்டத்தின் கீழ், தற்போதுள்ள, 2018 சிகிச்சை தொகுப்பு விகிதங்களை, எச்.பி.பி., - 2022 தொகுப்பு விகிதங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் திருத்தி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம், யஷஸ்வினி திட்டம், கர்நாடக கட்டடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர் நல ஆணையம், இ.எஸ்.ஐ., எனும் ஊழியர்களின் மாநில காப்பீடு மற்றும் அது தொடர்பான திட்டங்களும், இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டு உள்ளது
l மாவட்டம், தாலுகா அளவிலான மருத்துவமனைகளில் காரணியல் துறை, அறுவை சிகிச்சை அரங்குகள், ஐ.சி.,யுக்கள், படிப்படியாக தரம் உயர்த்தப்படும். இதற்காக, 45 கோடி ரூபாய் ஒதுக்கீடு
l மாநிலத்தில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவம், ஊட்டச்சத்து சிகிச்சை வழங்க, ஏற்கனவே, 86 தாலுாக்களில் ஊட்டச்சத்து மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நடப்பாண்டு கூடுதலாக, 63 தாலுகாக்களில் இம்மையங்கள் துவங்க, 6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
l எடை குறைவாகவும், நோய்வாய்ப்பட்ட நிலையிலும் பிறந்த குழந்தைகளுக்கான அத்தியாவசிய மருந்துகள், பராமரிப்பு சேவைகள், பிரசவத்துக்கு முந்தைய பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்த, 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு
l 'டைப் - 1' நீரிழிவு நோய் பாதித்த குழந்தைகள் முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு, இலவசமாக இன்சுலின் வழங்கப்படும்
l கல்யாண கர்நாடகா பகுதியில் சுகாதார துறையை பலப்படுத்த, முன்னுரிமை அடிப்படையில், சுகாதார துறைக்கு, கே.கே.ஆர்.டி.பி., எனும் கல்யாண கர்நாடக மண்டல மேம்பாட்டு ஆணையத்தின், 'வருடாந்திர உள்ளூர் திட்ட' நிதி ஒதுக்கப்படும்
l பல்லாரி, விஜயநகரா, சித்ரதுர்கா, துமகூரு மாவட்டங்களில், சுரங்க தொழிலால் பாதிக்கப்பட்ட அனைத்து தாலுகா மக்களுக்கும், கர்நாடக சுரங்க சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு கார்ப்பரேஷன் நிதியின் கீழ், விரிவான சுகாதார சேவை வழங்கப்படும்
l கடுமையான, நாள்பட்ட, இறுதி கட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, பாலியம் இந்தியா அரசு சாரா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து கேரள மாதிரி வீட்டு அடிப்படையிலான நோய்தடுப்பு சிகிச்சை
l ஆண்டுதோறும் 1.35 லட்சம் டயாலிசிஸ் சேவை வழங்குவதற்காக, 50 மையங்கள் 150 படுக்கைகள் கொண்ட மையங்களாக தரம் உயர்த்தப்படும். இதற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு
l தாவணகெரே தாலுகாவில் உள்ள மாயகொண்டே ஆரம்ப சுகாதார மையம், சமுதாய சுகாதார மையமாக தரம் உயர்த்தப்படும்
l மாவட்ட சுகாதார அதிகாரிகள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் சுகாதார துறையில் உள்ள பிற நிர்வாக பதவிகளை நியமிப்பதில், வெளிப்படை தன்மையை உறுதி செய்வதன் மூலம், பொது சுகாதார பணியாளர்கள் படிப்படியாக நியமிக்கப்படுவர்
l 'சமஸ்தா' மொபைல் செயலி மூலம், அனைத்து சுகாதார துறை ஊழியர்களின் வருகை பதிவேடு பராமரிப்பு
l அரசு சுகாதார மையங்களில் முழுமையாக கணினிமயமாக்கப்பட்ட பதிவு, சுகாதார பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல், யு.பி.ஐ., அடிப்படையிலான கட்டண முறைகள்
l அனைத்து சுகாதார மையங்களிலும், டெலி ரேடியோலஜி, டெலி லேபர் அறைகள்
l இஸ்கான் உணவு வினியோக மாதிரியில், மாநிலத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டம், தாலுகா மருத்துவமனைகளுக்கு விரிவாக்கம்
l மாவட்டம், தாலுகாக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயுஷ் மருத்துவமனைகளில், தன்னிறைவு மாதிரியில், 'பஞ்சகர்மா' மையங்கள்
l இத்துறையில் காலியாக உள்ள 2,500 பதவிகள் விரைவில் நிரப்பப்படும்.
