ADDED : ஜூன் 02, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு : ஆரோக்கிய மந்திர் டிரஸ்ட் சார்பில் 21 நாட்கள் நடக்கும், இலவச யோகா வகுப்பு நேற்று முதல் துவங்கியது.
பெங்களூரு ராஜாஜிநகர் 1 வது ஆர் பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ஆரோக்கிய மந்திர் டிரஸ்ட்டின் ஹோலிஸ்டிக் ஹெல்த் சென்டர் உள்ளது. இந்த டிரஸ்ட் சார்பில் 21 நாட்கள் நடக்கும், இலவச யோகா வகுப்பு நேற்று துவங்கியது. தினமும் காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரையிலும்; மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரையிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த வகுப்பை பயன்படுத்தி கொள்ள விரும்புவோர் 080 - 2357 9755, 2579 1143 என்ற லேண்ட்லைன் எண்ணிலும், மொபைல் எண் 99457 00168, 98455 57078, 98457 82021 லும் தொடர்பு கொள்ளலாம்.