ADDED : அக் 25, 2025 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தார்வாட்: தார்வாட் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையின்போது சூதாட்டம் நடப்பதை தடுக்க, கடந்த 20 முதல் 23ம் தேதி வரை மாவட்ட போலீசார் சிறப்பு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சூதாட்டங்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., குஞ்சன் ஆர்யா கூறியதாவது:
சூதாட்டத்துக்கு எதிராக மாவட்டத்தின் பல பகுதிகளில் நடந்த மூன்று நாட்கள் நடந்த சிறப்பு சோதனையில் 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுவரை 492 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 4,41,535 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், தார்வாட் கிராமப்புற போலீஸ் நிலையத்தில் அதிகபட்சமாக 11 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.

