/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பணத்தை திருப்பி கேட்டவரை கடத்தி மர்ம உறுப்பில் சூடு வைத்த கும்பல்
/
பணத்தை திருப்பி கேட்டவரை கடத்தி மர்ம உறுப்பில் சூடு வைத்த கும்பல்
பணத்தை திருப்பி கேட்டவரை கடத்தி மர்ம உறுப்பில் சூடு வைத்த கும்பல்
பணத்தை திருப்பி கேட்டவரை கடத்தி மர்ம உறுப்பில் சூடு வைத்த கும்பல்
ADDED : அக் 13, 2025 03:35 AM
கோரமங்களா : கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவரை, கடத்தி சென்று மர்ம உறுப்பில் சூடு வைத்து சித்ரவதை செய்த மூவர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
பெங்களூரின் கோரமங்களாவில் வசிப்பவர் சகாய் ராஜ், 45. இவருக்கு ஆனந்தகுமார் என்பவர் அறிமுகம் ஆனார். சில மாதங்களுக்கு முன், இவர், தன் தந்தைக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. கடனாக பணம் தரும்படி கேட்டார். இதன்படி அவரது மகள் ஐஸ்வர்யாவின் கணக்கில், சகாய் ராஜ் 3 லட்சம் ரூபாய் பரிமாற்றம் செய்தார்.
தங்களின் வீட்டை விற்று, பணம் கொடுப்பதாக ஆனந்தகுமார் கூறினார். இதை கேட்ட சகாய் ராஜ், அந்த வீட்டை தனக்கே விற்கும்படி கூறினார். இதற்கு ஆனந்தகுமாரும் ஒப்புக்கொண்டார். முன் பணமாக 1 கோடி ரூபாயும், ஒப்பந்தம் முடிந்த பின், மீதி தொகையை தருவது என, இரு தரப்பினரும் பேசி முடிவு செய்தனர்.
அதன்படி சகாய் ராஜ், 1 கோடி ரூபாய் கொடுத்தார். பணம் வாங்கி நீண்ட நாட்களாகியும், வீட்டை அவரது பெயருக்கு பதிவு செய்து தராமல், ஆனந்தகுமார் இழுத்தடித்ததால் தன் பணத்தை திருப்பி தரும்படி சகாய் ராஜ் கேட்டார்.
இதனால், கோபமடைந்த ஆனந்தகுமார், தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, நேற்று முன்தினம் காரில் சென்ற சகாய் ராஜை வழிமறித்து, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு, கடத்தி சென்றனர். கை, கால்களை கட்டினர். அவரது தொடையிலும், மர்ம உறுப்பிலும் சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை செய்தனர். ஊசியால் அவரது மர்ம உறுப்பில் குத்தினர். இதை வீடியோவில் பதிவு செய்தனர்.
இரவு முழுதும், காரில் வைத்து சுற்றினர். நேற்று அதிகாலையில், கோரமங்களா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செல்லும் போது, 'காப்பாற்றுங்கள்' என, சகாய் ராஜ் அலறி கூச்சல் போட்டார். இதை கேட்ட அப்பகுதியினர், வாகன பயணியர், அந்த காரை மடக்கி சகாய் ராஜை காப்பாற்றினர்; கடத்தல்காரர்கள் தப்பிவிட்டனர்.
சகாய் ராஜ், கோரமங்களா போலீஸ் நிலையத்துக்கு சென்று, ஆனந்தகுமார், அவரது மகள் ஐஸ்வர்யா, கூட்டாளி ஆஷிஷ் உட்பட சிலர் மீது புகார் அளித்தார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து, விசாரணையை துவக்கி உள்ளனர்.