தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெண் கொலையில் காதலர் கைது காட்டி கொடுத்தது மொபைல் போன்

 பெண் கொலையில் காதலர் கைது காட்டி கொடுத்தது மொபைல் போன்

 பெண் கொலையில் காதலர் கைது காட்டி கொடுத்தது மொபைல் போன்


ADDED : செப் 13, 2026 11:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2026 11:25 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெலகாவி: கள்ளக்காதலியை கொலை செய்தவர், இரண்டு மாதங்களுக்கு பின் சிக்கினார்.

பெலகாவி மாவட்டம், மூடலகி தாலுகாவின், கவுஜலகி கிராமத்தில் வசிப்பவர் சித்தப்பா, 40. இவரது மனைவி அன்னபூர்ணா, 35. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள், தங்களின், 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வாழ்கின்றனர்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், கோகாக் தாலுகாவின், சிங்களாபுரா கிராமத்தை சேர்ந்த திலீப் கடகரி, 40. இவருக்கு திருமணமாகி, நான்கு குழந்தைகள் உள்ளனர்.

திலீப் வீடு கட்டும் பணிக்காக, கவுஜலகி கிராமத்துக்கு சென்றிருந்தார். அப்போது, இவருக்கு கட்டுமானம் நடந்த வீடு அருகே வசிக்கும் அன்னபூர்ணா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இந்நிலையில், ஜூலை 23ம் தேதியன்று, அன்னபூர்ணா திடீரென காணாமல் போனார். இது குறித்து, போலீசாரிடம், அவரது கணவர் சித்தப்பா புகார் அளித்தார். போலீசார் தேடிய போது, கவுஜலகி கிராமத்தின் புறநகரில் உள்ள கரும்பு தோட்டத்தில், அன்னபூர்ணா கொலையாகி கிடந்தார்.

அவருக்கு, கடைசியாக போன் செய்தது யார் என, போலீசார் ஆய்வு செய்த போது, திலீப் என்பது தெரிந்தது.

கொலையான அன்னபூர்ணாவின் மொபைல் போனில், வேறு ஒரு சிம் போட்டு பயன்படுத்துவதை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் லொகேஷனை வைத்து, விசாரணை நடத்தி, திலீப்பை கண்டுபிடித்து கைது செய்தனர்.

அவரிடம் விசாரித்த போது, ஜூலை 23ம் தேதியன்று, அன்னபூர்ணாவை கரும்பு தோட்டத்துக்கு வரவழைத்த திலீப், பைக் இ.எம்.ஐ., கட்ட பணம் தரும்படி கேட்டார்.

அவர் மறுத்ததால், கழுத்தை நெரித்து கொலை செய்து, அவர் அணிந்திருந்த தங்கச்செயின், கம்மல், மொபைல் போனை திருடிக்கொண்டு தப்பியது தெரிந்தது.

திலீபை கைது செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரிக் கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us