UPDATED : அக் 24, 2026 12:00 AM
ADDED : அக் 23, 2026 11:18 PM
பெங்களூரு: ஹிந்துக்கள் வீடுகளில் பல கடவுள்களின் புகைப்படங்க ளை வைத்து வணங்குவர். பல ஆண்டுகள் ஆகி கரையான் அரித்த அல்லது நிறம் மங்கிய புகைப்படங்களை அப்புறப்படுத்த நினைக்கும் போது, கடவுள் புகைப்படங்களை எங்கு போடுவது என்று குழப்பம் ஏற்படுகிறது.
ஒரு சிலர் நடைபாதை களிலோ அல்லது கோவில் வாசலிலோ புகைப்படங்களை வைத்து செல்கின்றனர்.
இந்நிலையில், பெங்களூரு நகர மக்கள் பழைய கடவுள் புகைப்படங்களை மரியாதையுடன் அப்புறப்படுத்தப்படும் வகையில், இன்று சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹெச்.எஸ்.ஆர்., லே – அவுட் 7வது செக்டார் பகுதியில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகர் கோவிலுக்கு, கடவுளின் பழைய புகைப்படங்கள் எடுத்து வரலாம்.
காலை 8:00 மணி முதல் காலை 10:30 மணி வரை புகைப்படங்களை கொடுக்கலாம். கூரியரில் அனுப்பி வைக்க கூடாது.
கடவுளின் புகைப்படங்களை கோவில் வளாகத்தில் வைத்து பூஜை செய்ய உள்ளனர்.
பின், புகைப்படங்களின் பிரேம்களை கழற்றி, புகைப்படங்களை மட்டும் தனியாக எடுத்து, மறுசுழற்சி செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது.
