/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கிரஹ ஆரோக்கியா திட்டம் ரூ.185 கோடி அரசு ஒதுக்கீடு
/
கிரஹ ஆரோக்கியா திட்டம் ரூ.185 கோடி அரசு ஒதுக்கீடு
ADDED : ஜூன் 14, 2025 11:03 PM
பெங்களூரு: 'கிரஹ ஆரோக்கியா திட்டத்தின் கீழ், தொற்று பரவாத நோய்களுக்கு இலவச சிகிச்சை வசதியை மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்படும்.
'இதற்காக 185 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி உள்ளது' என, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
'கிரஹ ஆரோக்கியா' திட்டத்தின் கீழ், தொற்று பரவாத நோய்களுக்கு இலவச சிகிச்சை வசதியை மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்படும். இதற்காக 185 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி உள்ளது.
ஆஷா சுகாதார பணியாளர்கள், வீடுதோறும் சென்று, ரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய் போன்ற 14 வகையான தொற்று பரவாத நோய்கள் குறித்தும்; 30 வயதுக்கு மேற்பட்டோர் கண்டிப்பாக ஆயுஷ்மான் சுகாதார மையங்களில் பரிசோதிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவர். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்படும்.
ஆரம்பத்திலேயே இந்நோய்களுக்கான சிகிச்சை பெற்று கொண்டால், அசம்பாவதத்தை தவிர்க்கலாம். இத்திட்டத்தால், வரும் நாட்களில் பல உயிர்களை காக்கும். இத்திட்டத்துக்காக ஆண்டுதோறும் 185.74 கோடி ரூபாயை ஒதுக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.