தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/அரசு பஸ் வாடகை உயர்வு

அரசு பஸ் வாடகை உயர்வு

அரசு பஸ் வாடகை உயர்வு


UPDATED : நவ 13, 2026 12:00 AM

ADDED : நவ 12, 2026 10:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 12:00 AM ADDED : நவ 12, 2026 10:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: அனைத்து, அரசு பஸ்களின் வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில் அரசு பஸ்களில் டிக்கெட் கட்டணம் 18 முதல், 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இது, பயணியருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், போக்குவரத்து கழக நிர்வாகங்கள் அளித்த பரிந்துரைகளின் படி, அரசு பஸ்களின் வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டு தற்போது அமலுக்கு வந்துள்ளது.

அரசு நிகழ்ச்சி, தனியார் நிகழ்ச்சிகளுக்கு அரசு பஸ்கள் வாடகைக்கு விடப்படுகின்றன. பஸ்களுக்கு ஏற்றாற் போல கி.மீ., அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அந்த வகையில், சாதாரண பஸ்களில் ஒரு கி.மீ.,க்கு, 62 ரூபாயிலிருந்து 66 ரூபாய்; ஸ்லீப்பர் பஸ்களில் ஒரு கி.மீ.,க்கு, 80 ரூபாயிலிருந்து 85 ரூபாய்; ‘ஏசி’ ஸ்லீப்பர் பஸ்களில் ஒரு கி.மீ.,க்கு 125 ரூபாயிலிருந்து 130 ரூபாயாக வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டணம் வார நாட்களில் மட்டுமே பொருந்தும். வார விடுமுறை, பண்டிகை நாட்களில் கட்டணம் மாறுபடும். அதுபோல, மாநிலங்களுக்கு இடையேயான பஸ் சேவையின் போதும் கட்டணம் மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us