தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/போலீசாரின் குளறுபடியால் சிறையில் இருந்த நிரபராதி

போலீசாரின் குளறுபடியால் சிறையில் இருந்த நிரபராதி

போலீசாரின் குளறுபடியால் சிறையில் இருந்த நிரபராதி


UPDATED : நவ 13, 2026 12:00 AM

ADDED : நவ 12, 2026 10:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 12:00 AM ADDED : நவ 12, 2026 10:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: போலீஸ் விசாரணையில் ஏற்பட்ட குளறுபடியால், எந்த தவறும் செய்யாத நிரபராதி ஒருவர், இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாண்டியா மாவட்டம், பாண்டவபுரா நகரைச் சேர்ந்தவர் மஞ்சு, 25. இவர், 2019ல் வீட்டை விட்டு காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது தந்தை நாகராஜு, பாண்டவபுரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் கிராமத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

மஞ்சுவின் மொபைல் போனை வைத்து விசாரித்த போது, அவர் காணாமல் போவதற்கு முன், பாண்டவபுரா பஸ் நிலையத்தில் ராஜேஷ், 32, என்பவருடன் கடைசியாக பேசியது தெரிந்தது.

இதன் அடிப்படையில், மஞ்சு காணாமல் போன இரண்டு ஆண்டுகளுக்குப் பின், ராஜேஷ் மீது கொலை வழக்கு பதிவானது. அவரை கைது செய்த போலீசார், அவரை சித்ரவதை செய்து, ஒப்புதல் வாக்குமூலம் வாங்கினர்.

இதனால், 2021 முதல் 2024 ஜனவரி வரை, சிறையில் இருந்த ராஜேஷ் அதன் பின் ஜாமின் பெற்று விடுதலையானார்.

இந்நிலையில், கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட மஞ்சு, நாகமங்களாவில் உயிரோடு இருப்பது தெரிய வந்தது. ராஜேஷின் வக்கீல் நடேஷ் என்பவர், மஞ்சுவை கண்டுபிடித்தார். அவரை அழைத்துச் சென்று, பின்டிகனவிலே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீசார் விசாரித்த போது, பெற்றோர் தனக்கு விருப்பம் இல்லாத நபரை, திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தியதால், வீட்டை விட்டு ஓடினேன்.

தற்போது வேறு நபரை திருமணம் செய்து வாழ்கிறேன். ராஜேஷ் யார் என்பதே எனக்கு தெரியாது. அவர் எனக்கு அறிமுகம் இல்லை என்றார்.

இதையடுத்து, நிரபராதியான தனக்கு போலீசாரின் விசாரணை குளறுபடியால், இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்ததற்கு நியாயம் கேட்டு நீதிமன்றத்தை நாடப் போவதாக ராஜேஷ் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கொலைக் குற்றத்துக்கான தண்டனை பெற்றவர், எந்த தவறையும் செய்யாததை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us