/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசு மகப்பேறு மருத்துவமனை புதுப்பிப்பு
/
அரசு மகப்பேறு மருத்துவமனை புதுப்பிப்பு
ADDED : செப் 18, 2025 07:47 AM

தங்கவயல் : “ராபர்ட்சன் பேட்டையில் உள்ள மகப்பேறு மருத்துவமனை, 3 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்படும்,” என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தெரிவித்தார்.
பயன்பாடு இல்லாததால், ராபர்ட்சன் பேட்டை நுாறாண்டு பழமையான அரசு மகப்பேறு மருத்துவமனை சீரழிந்து உள்ளது. இதன் கட்டடம் வலுவாக இருந்தாலும், கதவு, ஜன்னல் எல்லாமே மாயமாகிவிட்டன. 30 ஆண்டுகளாக கட்டடமே சிதைந்து கிடக்கிறது.
இதை நேற்று தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், “இதை முதல்வர் நிதியில் இருந்து 3 கோடி ரூபாய் பெற்று புதுப்பிக்கப்படும். மருத்துவமனையின் நிர்வாக அலுவலகம் ஏற்படுத்தப்படும்,” என்றார்.
மருத்துவர்களுடனும் அவர் ஆலோசனையும் நடத்தினார். நகராட்சி தலைவர் இந்திரா காந்தி, தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சுரேஷ் குமார் உட்பட மருத்துவத்துறையினர் உடன் இருந்தனர்.